தங்கத்தை தொடர்ந்து வெள்ளி வாங்குவதிலும் சிக்கல்.. ட்விஸ்ட் வைத்த மத்திய அரசு!
Restrictions To Import Silver In India | நாட்டின் அன்னிய செலாவணியை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு ஆண்டுக்கு பொதுமக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில், தங்கத்தை தொடர்ந்து வெள்ளி இறக்குமதி செயவ்தற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேற்கு ஆசியா போர் (West Asia War) காரணமாக எழுந்துள்ள சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக பொதுமக்கல் ஒரு ஆண்டுக்கு தங்கம் (Gold) வாங்க வேண்டாம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) நாட்டு மக்களிடம் கூறினார். இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த நிலையில், தங்கத்திற்கு அடுத்தபடியாக வெள்ளி (Silver) மீது மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளிக்கும் கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு
உலக அளவில் அதிகம் தங்கம் நுகரும் நாடாக இந்தியா இருந்தாலும், இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. தற்போது நிலவும் மேற்கு ஆசியா போர் காரணமாக, தங்கத்தை வாங்குவது அன்னிய செலவாணியை மேலும் அதிகரிக்கும் அபாத்தை ஏற்படுத்தும். எனவே தான், ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க : ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.64,227 வரை லாபம் – எஸ்பிஐயின் ஃபிக்சட் டெபாசிட் திட்டம்




வெள்ளி பார்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடு
இந்திய பொதுமக்கள் மத்தியில் தங்கம் பாரம்பரியமாக மட்டுமன்றி, சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக தான் பலரும் தங்க நகைகளை வாங்கி வைக்கின்றனர். இந்த நிலையில் தான், பொதுமக்கள் தங்கத்தை வாங்குவதை குறைக்க மத்திய அரசு இறக்குமதி வரியை அதிகரித்தது. இதன் காரணமாக அதிக விலைக்கு தங்கத்தை வாங்க வேண்டும் என்ற கட்டாயம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க : பிடிகொடுக்காத ட்ரம்ப்.. அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. எதிர்காலம் என்ன?
தற்போதைய சூழலில் தங்கத்தை வாங்க முடியாது என்பதற்காக வெள்ளி ஈடிஎஃப்கள் அல்லது பார்களில் முதலீடு செய்யலாம் என பொதுமக்கள் நினைத்துக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில், அரசு அதில் பெரும் இடியை இறக்கியுள்ளது. அதாவது, வெள்ளி பார்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அரசு, வெள்ளி பார்களை தடையற்ற பிரிவில் இருந்து கட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்கு மாற்றியுள்ளது. எனவே இனி வெள்ளி பார்களை இறக்குமதி செய்ய அரசின் உரிமம் கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளது. அன்னிய செலாவணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.