மாதம் ரூ.9,250 வருமானம் பெறலாம்.. கணவன் – மனைவி இணைந்து முதலீடு செய்ய அசத்தல் திட்டம்!
Post Office Monthly Income Scheme | அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றாக அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் உள்ளது. இதில் முதலீடு செய்து அதிக லாபம் பெற முடியும்.
வருமானத்தை முதலீடு செய்து பாதுகாப்பான பொருளாதாரத்தை உருவாக்க அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதால் அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் (MIS – Monthly Income Scheme). இந்த திட்டத்தில் கணவன் – மனைவி இணைந்து முதலீடு செய்து மாதம் ரூ.9,000 வரை வருமானம் பெற முடியும். இந்த நிலையில், அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்
அஞ்சலகங்கள் மூலம் வழங்கப்படும் இந்த அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்தில் தனிநபராகவும், கணவன் – மனைவியாகவும் இணைந்து முதலீடு செய்யலாம். இதன்படி, தனிநபராக இருந்தால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதுவே கூட்டு கணக்கு தொடங்கி முதலீடு செய்தால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இதில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும்.
இதையும் படிங்க : பெட்ரோல், டீசலை தொடர்ந்து இந்த பொருட்களின் விலைகளும் உயரும் வாய்ப்பு.. பொதுமக்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த ஷாக்!
மாதம் ரூ.9,250 வருமானமாக பெறலாம் – எப்படி?
கணவன் – மனைவி இணைந்து முதலீடு செய்ய இது சிறந்த திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக உள்ளது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த 5 ஆண்டுகளுக்கு உங்களால் முதலீடு செய்த அந்த பணத்தை எடுக்க முடியாது.
இதையும் படிங்க : எரிபொருள் விலை உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை
5 ஆண்டுகளுக்கு ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.5.55 லட்சம் கிடைக்கும். இதன் மூலம் மாதம் ரூ.9,250 வருமானமாக பெற முடியும். ஒருவேளை திட்டம் முதிர்ச்சி அடைவதற்கு முன்னதாக வேண்டும் என்றாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.