AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெட்ரோல், டீசலை தொடர்ந்து இந்த பொருட்களின் விலைகளும் உயரும் வாய்ப்பு.. பொதுமக்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த ஷாக்!

Daily Usage Products Price Will Be Increased | நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளான காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பெட்ரோல், டீசலை தொடர்ந்து இந்த பொருட்களின் விலைகளும் உயரும் வாய்ப்பு.. பொதுமக்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த ஷாக்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 15 May 2026 11:20 AM IST

மேற்கு ஆசிய போர் (West Asia War) காரணமாக உலக நாடுகள் மிக கடுமையான கச்சா எண்ணெய் (Crude Oil) பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் வெறும் 63 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது இரண்டு மடங்கு உயர்வை சந்தித்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் 107 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மேலும் சில பொருட்களின் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்

கச்ச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்தன. இருப்பினும், இந்தியாவில் எந்த வித மாற்றமும் இன்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் மிக கடுமையான நஷ்டத்தை எதிர்க்கொண்டு வந்தன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள்  கடந்த இரண்டு மாதங்களாக ரூ.30,000 கோடி இழப்பீட்டை சந்தித்து வந்தன.

இதையும் படிங்க : 7.5% வட்டி.. வெறும் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம்.. சிறந்த பலன்களை பெற முடியும்!

இந்த நிலையில் தான், பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலை உயர்வுக்கான நடவடிக்கையை எண்ணெய் நிறுவங்கள் கையில் எடுத்துள்ளன. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.100.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல் ரூ.3.14 விலை உயர்வை சந்தித்து தற்போது ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.3.11 விலை உயர்வை சந்தித்து ரூ.95.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : தங்க நாணய விற்பனை நிறுத்தம்.. தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் சம்மேளம் முக்கிய முடிவு.. காரணம் என்ன?

வேறு என்ன என்ன பொருட்கள் விலை உயர வாய்ப்பு?

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு அதிகரிப்பதன் காரணமாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான விலையும் உயரும் வாய்ப்பு உள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் லாரிகள் மூலம் வெளி மாநிலங்கள், வெளி ஊர்களில் இருந்து எடுத்து வரப்படுகிறது. இந்த நிலையில் டீசல் விலை ஏறும்போது சரக்கு கட்டணம் உயர்வதால் காய்கறிகளின் விலை உடனடியாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us