AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FD-ல் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.10,000 வருமானமாக பெறலாம்.. எப்படி?

10,000 Rupees Return In Fixed Deposit Scheme | இந்தியாவில் ஏராளமான வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாதம் ரூ.10,000 வருமானம் பெறும் வகையில் நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

FD-ல் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.10,000 வருமானமாக பெறலாம்.. எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 May 2026 18:34 PM IST

ஒருவர் தனது பொருளாதாரத்தை  பாதுகாக்க வேண்டும், உயர்த்த வேண்டும் என்றால் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. இதற்காக ஏராளமான அரசு மற்றும் தனியார் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்பு நிதி திட்டம் (FD – Fixed Deposit Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்து மாதம் ரூ.10,000 வருமானம் பெற முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிலையான வைப்பு நிதி திட்டம் எப்படி செயல்படும்?

நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ஒருவர் முதலில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு முதலீடு செய்யப்படும் பணத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டி வழங்கப்படும். இந்த நிலையில், முதலீட்டு காலம் முழுவதும் முதலீடு செய்து திட்டத்தின் முடிவில் முதலீடு மற்றும் அதற்காக வட்டி ஆகியவற்றை சேர்த்து பெற்றுக்கொள்ளலாம். திட்டத்தின் முடிவில் தான் மொத்த தொகையையும் பெற முடியும் என்றால் மாத மாதம் பணம் பெறுவது எப்படி என பலருக்கும் தோன்றும். அதற்கு ஒரு வழி உள்ளது. அதுதான், Non Cumulative Fixed Deposit திட்டம்.

இதையும் படிங்க : ரயில் டிக்கெட் முன்பதிவு.. 40 ஆண்டுகளாக இருந்த முறையில் வரும் முக்கிய மாற்றம்!

Non Cumulative FD – முதலீடு செய்து ரூ.10,000 பெறுவது எப்படி?

நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ஒருவர் மாதம் ரூ.10,000 வருமானம் பெற வேண்டும் என்றால், அவர் வட்டியாக மட்டுமே ரூ.1,20,000 பெற வேண்டும். அப்போதுதான் அவரால் மாதம் ரூ.10,000 பெற முடியும். ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம் வருமானத்தை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள திட்டம் தான் Non Cumulative FD திட்டம்.

இதையும் படிங்க : இனி ரூ.1 லட்சம் லிமிட் இல்லை.. UPI-ல் மாறிய ரூல்ஸ்.. புதிய விதிகள் கூறுவது என்ன?

8  சதவீதம் வட்டி திட்டத்தில் சிறந்த லாபம்

மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதம் வரை சில வங்கிகள் வட்டி வழங்குகின்றன. இந்த நிலையில், 8 சதவீதம் வட்டி வழங்கக்கூடிய நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ஒருவர் ரூ.15 லட்சம் பணத்தை முதலீடு செய்யும் பட்சத்தில் அவருக்கு மாதம் ரூ.10,000 வட்டியாக பெறலாம். தனியார் துறையில் பணியாற்றும் நபர்கள் தங்களது ஓய்வு காலத்தில் மாத ஊதியத்தை பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

Follow Us