நடப்பாண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்னென்ன?
Tamil Nadu Farmers Electricity Scheme : தமிழகத்தில் 2026–27 நடப்பு நிதியாண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகளை வழங்க மின்வாரியத்துக்கு ஒப்புதல் அளித்து, தமிழக அரசு (Tamil Nadu Government) அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 25 : தமிழகத்தில் 2026–27 நடப்பு நிதியாண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகளை வழங்க மின்வாரியத்துக்கு ஒப்புதல் அளித்து, தமிழக அரசு (Tamil Nadu Government) அரசாணை வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாக மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு இது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இந்த மின் இணைப்புகளுக்கான மானியச் செலவான ரூ.127.56 கோடியை அரசு ஏற்கிறது. மின் இணைப்புகளை வழங்குவதற்குத் தேவையான கட்டமைப்புப் பணிகளுக்கான ரூ.750 கோடியை மின்வாரியம் ஏற்கிறது.
எப்படி விண்ணப்பிப்பது?
விவசாய மின் இணைப்பு பெற விரும்புவோர், மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவோ, தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்றோ விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு , சுயநிதித் திட்டம், விரைவு சேவையான தட்கல் திட்டம் ஆகிய மூன்று வழிகளில் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிக்க : திமுகவை மக்கள் தூக்கி எறிந்து விட்டனர்! விஜய்க்கு நிர்வாக அனுபவமில்லை.. ஆனால்.. வைகோ கூறிய அந்த வார்த்தை!




தேவையான ஆவணங்கள்
விண்ணப்பிக்கும் முன், கீழ்க்காணும் ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் அவற்றுக்குச் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அடையாளச் சான்றாக ஆதார் அட்டை மற்றும் நில உரிமை ஆவணங்களான விவசாய நிலத்துக்கான பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும் வரைபடம், கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ், கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு விண்ணப்பதாரருக்கே சொந்தமானது என்பதையும், அதற்கு ஏற்கெனவே மின் இணைப்பு எதுவும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தும் சான்று மற்றும் மோட்டார் பம்ப்செட்டின் குதிரைத்திறன் (HP) விவரம், உரிமம் பெற்ற மின் பணியாளரிடமிருந்து பெற்ற மதிப்பீட் டு அறிக்கை ஆகிய வற்றை சமர்பிக்க வேண்டியிருக்கும்.
விண்ணப்ப நடைமுறை
- விண்ணப்பதாரர் வசிக்கும் வட்டத்தில் உள்ள மின்வாரியப் பிரிவு அலுவலகம் அல்லது செயற்பொறியாளர் அலுவலகத்துக்குச் சென்று, விவசாய மின் இணைப்புக்கான ‘படிவம்-2’ (Form-2) விண்ணப்பத்தைப் பெற வேண்டும்.
- படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து, பொறுப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான முத்திரையிட்ட ரசீது அல்லது பதிவு எண்ணைக் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- விண்ணப்பித்த பிறகு, இளநிலைப் பொறியாளர் நிலத்துக்கு நேரில் வந்து, கிணறு அல்லது ஆழ்துளைக் கிணற்றைப் பார்வையிட்டு, சர்வே எண்களைச் சரிபார்த்து, மின் இணைப்பு வழங்குவது தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமா என்பதை உறுதி செய்வார்.
- அனுமதியும் தொழில்நுட்ப ஒப்புதலும் கிடைத்ததும், களப்பணியாளர்கள் வந்து மின் மீட்டரைப் பொருத்தி இணைப்பு வழங்குவார்கள்.
இதையும் படிக்க : ஈரோடு செல்லும் முதல்வர் விஜய்? ரோட் ஷோ செல்ல திட்டம்!
பொதுப்பிரிவில் விண்ணப்பித்தால், விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட தேதியின் அடிப்படையில் முன்னுரிமை வரிசை நிர்ணயிக்கப்படும். நீண்ட காத்திருப்புப் பட்டியலைத் தவிர்க்க விரும்புவோர், விண்ணப்பப் பதிவு திறக்கப்படும் காலங்களில் தட்கல் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு, மோட்டாரின் குதிரைத்திறனுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால், முன்னுரிமை அடிப்படையில் விரைவாக மின் இணைப்பு வழங்கப்படும் என எரிசக்தித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.