AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எனது மகனின் திரை வாழ்க்கைக்கு நான் ஆதரவளிக்காமல் தவறவிட்டேன் – தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்!

Producer AM Rathnam talks about his son Ravi Krishna | தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக உள்ளவர் ஏ.எம்.ரத்னம். இவர் சமீபத்தில் அவரது மகன் நடிகர் ரவி கிருஷ்ணா குறித்து பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

எனது மகனின் திரை வாழ்க்கைக்கு நான் ஆதரவளிக்காமல் தவறவிட்டேன் – தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்!
ஏ.எம்.ரத்னா - ரவி கிருஷ்ணாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Oct 2026 08:00 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ஏ.எம்.ரத்னம். இவரது மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் ரவி கிருஷ்ணா (Actor Ravi Krishna). இவர் இயக்குநர் செல்வராகவன் எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் வெளியான 7ஜி ரெயின்போ காலணி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் தான் தெலுங்கு மொழியில் வெளியான போது தெலுங்கு சினிமா ரசிகர்களிடையேயும் அறிமுகம் ஆனார். நடிகர் ரவி கிருஷ்ணா நாயனாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் 2011-ம் ஆண்டு வரை நடித்து வந்தார் நடிகர் ரவி கிருஷ்ணா.

அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் படங்கள் எதுவும் வெளிவரவில்லை. தற்போது 7ஜி ரெயின்போ காலனி உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இவரது தந்தை ஏ.எம்.ரத்னம் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

எனது மகனின் திரை வாழ்க்கைக்கு நான் ஆதரவளிக்காமல் தவறவிட்டேன்:

அந்தப் பேட்டியில் ஏ.எம்.ரத்னம் பேசியதாவது, தனது மகன் ரவி கிருஷ்ணாவின் நடிப்பு வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். திரையுலகில் இருந்த காலத்தில், தனது மகனுக்குத் தேவையான ஆதரவை இன்னும் சிறப்பாக வழங்கியிருக்கலாம் என்று அவர் ஒப்புக்கொண்டார்.

உண்மையைச் சொல்லப்போனால், எனது வேலையில் நான் மிகவும் பிஸியாக இருந்ததால், அவனுக்குத் தகுந்த ஆதரவை வழங்கவோ அல்லது அவனது திரை வாழ்க்கையைத் திட்டமிடவோ தவறிவிட்டேன். அவனுக்கு வெளியிலிருந்து சுமார் 20 முதல் 30 திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவற்றில் பல கதைகள் அவனுக்குப் பிடிக்காததால், அவற்றில் நடிக்க அவர் மறுத்துவிட்டார்.

அவற்றில் ஒன்றுதான் ‘ஆரண்ய காண்டம்’. அந்தப் படத்தின் இயக்குனர் பிற்காலத்தில் தேசிய விருதை வென்றார். எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மகன் சரண் அந்தப் படத்தில் தொடர்புடையவராக இருந்ததாலும், நாங்கள் குடும்ப நண்பர்களாக இருந்ததாலும் அந்தப் படம் உருவானது. அந்தப் படத்தில் ரவி முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், அதற்காக அவர் நல்ல அங்கீகாரத்தையும் பெற்றார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Also Read… இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தானம் இருக்கும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Love Bite: சந்தானத்தின் லவ் பைட் படத்தின் ஷூட்டிங் ஓவர் – படக்குழு பகிர்ந்த வீடியோ!

Follow Us