AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Nayanthara: அதனால்தான் எனக்கு பிரச்சனையே.. நயன்தாரா பகிர்ந்த விஷயம்!

Nayantharas Bold Confession: சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாகவே நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்துவருபவர் நயன்தாரா. இவர் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள நிலையில், அதில் தனது வாழ்க்கை மற்றும் உறவுகளில் எதற்காக பிரச்சனை வரும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

Nayanthara: அதனால்தான் எனக்கு பிரச்சனையே.. நயன்தாரா பகிர்ந்த விஷயம்!
நயன்தாரா Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 25 Oct 2026 08:27 AM IST

தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் நயன்தாரா (Nayanthara). இவரை அவரின் ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் (Lady Superstar) என்றும் அழைத்துவருகிறார்கள். மலையாள சினிமாவின் மூலமாக நாயகியாக நுழைந்த இவர், தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக இருந்துவருகிறார். தமிழில் இயக்குநர் ஹரி (Director Hari) இயக்கத்தில் வெளியான ஐயா என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இதன் பிறகு சந்திரமுகி, கஜினி போன்ற பேக் டூ பேக் தமிழ் திரைப்படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கியிருந்தார். இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 80-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியிருக்கும்.

கடந்த 2005ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவருகிறார். முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நயன்தாரா, தனது வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனையாக இருக்கும் காரணம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: இதுவரைக்கும் யாரும் நேர என்னிடம் Propose பண்ணதில்லை – சாய் பல்லவி பகிர்ந்த விஷயம்!

தனது உறவு மற்றும் வாழ்க்கையில் பிரச்சனையாக இருக்கும் காரணம் பற்றி பேசிய நயன்தாரா:

அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர், நீங்கள் உண்மையாக இருப்பதாய் தரவு என நினைக்கிறீர்களா? என கேள்வி கேட்டிருந்தார். அதற்க்கு உடனே பதிலளித்த நயன்தாரா, “ஆமாம், முக்காவாசி இதனால்தான் எனக்கு பிரச்சனையே வரும். எனக்குன்னு ஒரு சிந்தனை இருக்கும் அல்லவா, அது என்னை எப்போதும் உண்மையாக இருக்கும்படியாக செய்யவைக்கிறது.

நான் எது செய்தலும், குறிப்பாக நட்பு, உறவு மற்றும் வேலை என எல்லாவற்றிலும் உண்மையாக இருக்கவேண்டும் என நினைப்பேன். இப்போது நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கும்போது உங்களிடம் உண்மையான பதிலை சொல்லவேண்டும் என நான் நினைப்பேன், அதனாலே எனக்கு பிரச்சனைகள் அதிகமாக வரும்” என அதில் அவர் கூறியிருந்தார்.

நடிகை நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் குறித்த பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

நடிகை நயன்தாராவின் நடிப்பில் 2026ம் ஆண்டில் இதுவரைக்கும் 2 படங்கள் வெளியாகியுள்ளது. தமிழில் இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹை படத்திலும், கன்னடத்தில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் படிங்க: அவர் இல்லாமல் நான் இல்லை.. அஜித் குறித்து பேசிய எஸ்.ஜே.சூர்யா!

இந்த படத்தை அடுத்ததாக 3வது படமாக மிகவும் பிரம்மாண்டமான கதை மற்றும் பக்தி படமாக வெளியாக காத்திருப்பதுதான் மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தை சுந்தர் சி இயக்கியிருக்கும் நிலையில், 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிறகும் நயன்தாராவின் நடிப்பில் பேக் டூ பேக் படங்கள் உருவாகிவருகிறது.

Follow Us