AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sai Pallavi: இதுவரைக்கும் யாரும் நேர என்னிடம் Propose பண்ணதில்லை – சாய் பல்லவி பகிர்ந்த விஷயம்!

Sai Pallavi About Love Propose: தென்னிந்திய சினிமாவில் நேச்சுரல் பியூட்டி என அழைக்கப்பட்டுவருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் முன்பு பேசிய நேர்காணல் ஒன்றில், தனக்கு எந்தவித ப்ரொபோஸ் வந்ததில்லை என தெரிவித்துள்ளார். அவர் சொன்னது உண்மையா என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Sai Pallavi: இதுவரைக்கும் யாரும் நேர என்னிடம் Propose பண்ணதில்லை – சாய் பல்லவி பகிர்ந்த விஷயம்!
சாய் பல்லவிImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 12 Oct 2026 08:36 AM IST

கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகம் ஈர்க்கப்படும் நாயகியாக இருந்துவருபவர் சாய் பல்லவி (Sai Pallavi). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. மலையாளம் சினிமாவின் மூலமாக நாயகியாக நுழைந்த இவர், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் ஆரம்பகாலங்களில் நடித்து ஹிட் நடிகையானார். தற்போது இவர் இந்தி சினிமாவிலும் நாயகியாக நுழைந்துள்ளார். ஆமீர்கான் தயாரிப்பில் வெளியான “ஏக் தின்” (EK Din) என்ற படத்தின் மூலமாக இந்தி சினிமாவில் நாயகியாக நுழைந்தார். இப்படமானது அவருக்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கிவிட்டார்.

மேலும் ராமாயணா படத்திலும் செய்தியாக இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த சாய் பல்லவி, அதில் தனக்கு இதுவரைக்கும் நேரடியாக எந்த காதல் Propose வந்ததில்லை என கூறியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகி உள்ள சூரியின் மண்டாட்டி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

தனக்கு Propose வந்ததில்லை என்பது குறித்து சாய் பல்லவி சொன்ன விஷயம்:

அந்த நேர்காணலில் சாய் பல்லவியிடம் உங்கள் வருங்கால துணை எவ்வாறு இருக்கவேண்டும் என கேட்டிருந்தார். அதற்க்கு சாய் பல்லவி, உண்மையாக இருக்கவேண்டும், எந்தவித ஏமாற்றமும் இருக்கக்கூடாது. அவர் உண்மையாக இருப்பதே மிகவும் முக்கியம் என கூறியிருந்தார். அதன் பின் தொகுப்பாளர் இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது லவ் Propose வந்திருக்கிறதா? என கேட்டிருந்தார். அதற்கு அவர், இதுவரைக்கும் வரவே இல்லை. இதுவரைக்கும் யாரும் என்னிடம் நேரடியாக வந்து லவ் சொன்னதே இல்லை. “ஐ லவ் யு-னு யாரும் நேராக வந்து சொன்னதே இல்லை.

இதையும் படிங்க: டோரதி பட ஹிட்… சனந்த் மற்றும் ரிஷிகாந்த்துக்கு வாழ்த்து மடலை அனுப்பிய சியான் விக்ரம்!

மேலும் டுவிட்டரில் யாரவது ஒரு இவரு வார்த்தைகள் என்னை பற்றி எழுதுவார்கள், அதை பார்த்து மகிழ்ந்துகொள்வேன். அதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஆனால் அது உண்மையா என நம்பமுடியவில்லை. நேநேக சொல்ற மாதிரி “ஐ லவ் யு”, நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் னு யாரும் என்னிடம் நேரடியாக வந்து சொன்னதில்லை” என அதில் கூறியிருந்தார்.

சாய் பல்லவியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)

சாய் பல்லவியின் புதிய படங்கள்:

இவர் தனுஷின் ஓம் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதியில் வெளியாகிறது. மேலும் பாலிவுட்டில் ராமாயணா பார்ட் 1 படத்தில் நடித்திருக்கிறார். இது 2026ம் நவம்பர் 5ல் வெளியாகிறது. மேலும் ராமாயணா பார்ட் 2 படத்திலும் நடிக்கிறார்.

இதை தொடர்ந்து தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் கல்கி 2 படத்தில், தீபிகா படுகோன் நடித்திருந்த சுமதி வேடத்திலும் இவர்தான் நடிக்கிறார் என கூறப்படுகிறது. தற்போது இவர் தொடர்ந்து பிக் பட்ஜெட் படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us