ஓடிடியில் வெளியாகி உள்ள சூரியின் மண்டாட்டி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Mandaadi Movie OTT Review Here | தமிழ் சினிமாவில் நடிகர் சூரி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற படம் மண்டாட்டி. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து ஹிட் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் சூரி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். மேலும் அவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் மண்டாட்டி. ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் படகுப் போட்டியை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்தப் படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் சுஹாஸ், மஹிமா நம்பியார், ரவீந்திர விஜய், மிதுன் ஜெய் சங்கர், பால சரவணன், ஸ்டன் சிவா, ராமச்சந்திரன் துரைராஜ், பாத்மென், ஆடுகளம் முருகதாஸ், பி. கிருத்திகா பாலசுப்ரமணியம், கிரிஷ் ஹாசன், ரேகா குமணன், செங்கோல் சகாயராஜ், ராஜேஷ் கோபிஷெட்டி, அன்பரசி, நக்கலைட்ஸ் தனம் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
மண்டாட்டி படத்தின் கதை என்ன?
படத்தின் தொடக்கத்தில் ராமநாதபுரத்தில் உள்ள் முகவைப்பட்டினத்தில் வில்லன் சாட்டைப்புலியின் குடும்பத்தினர் தொடர்ந்து அந்த ஊர் சார்பாக படகுப்போட்டியில் கலந்துகொள்கிறார்கள். ஆனால் அந்த அணியில் ஊர்காரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதனை தட்டிக் கேட்ட நாயகியின் மகன் மாரிக்கும் சாட்டைப்புலி மகன் கிட்டானுக்கும் பெரிய சண்டை ஏற்படுகின்றது. இதில் கிட்டானை கொலை செய்ய முயற்சிக்கிறார் மாரி. இதனால் கோபமடைந்த சாட்டைப்புலி மாரியை கொலை செய்ய முயற்சிக்கிறார்.
அவரிடம் இருந்து தப்பிய மாரி சென்னைக்கு சென்று தனது அம்மாவின் முன்னாள் காதலர் தான் சூரி என்பது தெரியாமலே உதவி கேட்கிறார். தனது காதலியின் மகன் தான் தன்னை தேடி வந்துள்ளார் என்பதை அறிந்த சூரி அவருக்கு உதவி செய்கிறார். மேலும் அந்த மாரியின் நோக்கத்தை புரிந்துகொண்டு ஊரில் உள்ள ஆட்களை சேர்த்துக்கொண்டு சாட்டப்புலிக்கு எதிராக போட்டியில் கலந்துகொள்கிறார்.
இப்படி ஊரிலேயே பண பலமும் அதிகார பலமும் கொண்ட சாட்டைப் புலிக்கும் சூரிக்கும் இடையே முன்பு தீராத கணக்கு உள்ளதும் ஃப்ளாஸ்பேக்கில் தெரிகிறது. இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… ரணபாலி படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? போஸ்டர் வெளியிட்ட படக்குழு



