AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் இந்த வாரம் அக்‌ஷிதாவின் கேப்டன்சி குறித்து கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி – வெளியானது புரோமோ வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 5-வது வாரத்தில் வீட்டில் வைல்கார்ட் எண்ட்ரியாக வந்த அக்‌ஷிதா இந்த வாரத்திற்கான லீடரானார். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் முழுவது அவர் எப்படி செயல்பட்டார் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பிக்பாஸில் இந்த வாரம் அக்‌ஷிதாவின் கேப்டன்சி குறித்து கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி – வெளியானது புரோமோ வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Oct 2026 11:03 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த 4-வது வாரம் மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டநிலையில் தற்போது 3 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். அதன்படி காமென்மேன் நிகழ்ச்சியில் இருந்து கரிஷ்மா உட்பட நடிகை அக்‌ஷிதா மற்றும் சமூகவலைதளப் பிரபலம் டிடிஎஃப் வாசன் ஆகியோர் வைல்கார்ட் போட்டியாளராக உள்ளே அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் மூன்று பேரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு வீட்டில் உள்ள போட்டியாளர்களின் ஆட்டம் மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த மூன்று நபர்களில் ஒருவரை தான் இந்த வாரத்திற்கான லீடராக தேர்வு செய்ய வேண்டும் பிக்பாஸ் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அந்த மூன்று நபர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்தனர். அவர்தான் அக்‌ஷிதா. இந்த வாரம் முழுவதும் லீடராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் லீடராக பதவி ஏற்ற அந்த வாரத்தில் பல விசயங்கள் நடைப்பெற்றது. மேலும் டாஸ்கில் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடினாலும் அவர் லீடராக சில இடங்களில் கடமைகளை தவறியதாக சக போட்டியாளர்கள் விமர்சனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் அக்‌ஷிதாவின் கேப்டன்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்வி:

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் அக்‌ஷிதாவின் லீடர்சிப் எப்படி இருந்தது என்பது குறித்து போட்டியாளர்களிடையே விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். அப்போது வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படையாக பேசினார். மேலும் அக்‌ஷிதா ஜேசனின் வழிநடத்தல் படியே செயல்பட்டார் என்றும் போட்டியாளர்கள் விமர்சனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… வாரம் முழுவதும் டாஸ்கில் சண்டை… வார இறுதியில் லட்டரில் நெகிழ்ச்சி… நேற்றைய எபிசோடில் நடந்தது இதுதான்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… எல்லாம் என்ன வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களால் தான் – ரசிகர்கள் குறித்து நெகிழ்ந்து பேசிய ரஜினிகாந்த்!

Follow Us