AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்.. மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்.. திரையுலகில் பெரும் சோகம்!!

Nana Patekar Passes Away: இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற மூத்த நடிகரும், ரஜினிகாந்தின் 'காலா' பட வில்லனுமான நானா படேகர் (75) திடீர் மாரடைப்பால் காலமானார். தேசிய விருது பெற்ற சிறந்த நடிகரின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும், கோடிக்கணக்கான ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்.. மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்.. திரையுலகில் பெரும் சோகம்!!
நானா படேகர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Oct 2026 08:39 AM IST

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரும், தனது அசாத்தியமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவருமான மூத்த நடிகர் நானா படேகர் (75) திடீரென காலமானார். கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை 5.20 மணி அளவில் அவருக்கு ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு காரணமாக உயிர்பிரிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய விருது பெற்ற இந்த மகத்தான கலைஞனின் மறைவுச் செய்தி இந்தியத் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர், தென்னிந்திய சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் அப்டேட்

45 நிமிடங்கள் தீவிர சிகிச்சை:

இன்று அதிகாலை நானா படேகருக்குத் திடீரெனக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரை மீட்க மருத்துவக் குழுவினர் சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து தீவிர CPR சிகிச்சையை மேற்கொண்டனர். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக மணிப்பால் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவரது உடலுக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது மணிப்பால் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், விரைவில் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டுப் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகப் பயணமும் நடிப்பு ஆற்றலும்:

மராத்தி மற்றும் இந்தித் திரைப்படங்களில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய நானா படேகர், தனது தனித்துவமான வசன உச்சரிப்பாலும், கம்பீரமான முக பாவனைகளாலும் இந்தியச் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். ‘பரிந்தா’, ‘க்ராந்திவீர்’, ‘அக்னிசாக்ஷி’ போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் தனது அசாத்தியமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் உட்படப் பல உயரிய விருதுகளை வென்று குவித்துள்ளார். தீவிரமான வில்லன் கேரக்டர்கள் முதல் குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் மற்றும் நகைச்சுவை பாத்திரங்கள் வரை அனைத்து வகைமையிலும் தனது தனித்துவத்தை நிரூபித்தவர்.

தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்:

இந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோதிலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நானா படேகர் மிகவும் பரிட்சயமானவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘காலா’ திரைப்படத்தில் ‘ஹரிதாஸ்’ என்ற சக்திவாய்ந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துத் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ரஜினிக்கு இணையான வில்லத்தனத்தையும், கம்பீரமான நடிப்பையும் வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தார். ‘காலா’ படத்தில் இவருடைய நடிப்பு இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: லோகேஷ் கனகராஜுடன் ஹீரோவாக அறிமுகமாகும் அனிருத்? அட இயக்குநர் இவரா?

சமூகப் பணிகளும் முடிவில்லா நினைவுகளும்:

நடிகராக மட்டுமின்றி சிறந்த மனிதநேயப் பண்பாளராகவும் திகழ்ந்த நானா படேகர், ‘நாம் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர விவசாயிகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வந்தார். தனது வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை எளிய மக்களின் நலனுக்காகச் செலவிட்ட இவர், சினிமா தாண்டி மக்களின் நெஞ்சங்களிலும் வாழ்ந்து வந்தார். அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கு மட்டுமன்றி, அவரைச் நேசித்த சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

Follow Us