இன்று தொடங்கியது தனுஷ் 56 படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்!
Dhanush 56 Movie Shooting Update | நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக தனுஷ் 56 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வரிசையாக படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கர. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம் தி சாப்டர் 1. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
தனுஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தாலும் அவருடன் இணைந்து நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படம் வருகின்ற நவம்பர் மாதம் 20-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார்.




இன்று தொடங்கியது தனுஷ் 56 படத்தின் ஷூட்டிங்:
தற்காலிகமாக இந்த படத்திற்கு தனுஷ் 56 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்த நிலையில் இந்தப் படடத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாஸ்டர் அனல் அரசுவின் நடன இயக்கத்தில் (choreography) ஒரு பிரம்மாண்டமான சண்டைக் காட்சி படமாக்கப்படவுள்ளது.
இதற்காக 20 நாட்கள் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழரசன் பச்சமுத்துவிடமிருந்து ஒரு அதிரடியான ‘மாஸ்’ (mass) பொழுதுபோக்குத் திரைப்படம் வரவிருக்கிறது. தனுஷ் மீண்டும் முழு வீச்சிலான ‘மாஸ்’ அவதாரத்திற்குத் திரும்பியுள்ளார். 2027-ல் நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படங்களின் பட்டியலில் இதையும் சேர்த்துக்கொள்கிறேன்.
Also Read… சாப்பாட்டுக்காக பிரச்சனையா..? பிக் பாஸில் அன்சர் மற்றும் கிச்சன் டீமுக்கு இடையே ஏற்படும் மோதல்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#D56 – Shoot Begins From Today in Chennai..🔥 A Massy Action To be Shot Under AnL Arasu Master Choreography..⭐ 20 Days of shoot is planned..🤝
Said to be a Semma Massy Entertainer Loading from #TamizharasanPachamuthu..💥 Dhanush is Back to Full on Mass Zone..⭐ Adding this one to My One of the Most Awaited films of 2027..🤩
— Laxmi Kanth (@iammoviebuff007) October 10, 2026