AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரணபாலி படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? போஸ்டர் வெளியிட்ட படக்குழு

Ranabaali Movie 2nd Single Update Here | நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ரணபாலி. இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் குறித்து வெளியான அப்டேட் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரணபாலி படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? போஸ்டர் வெளியிட்ட படக்குழு
ரணபாலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Oct 2026 11:30 AM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது 15 ஆண்டுகள் முடிவடைந்து தற்போது 16-வது ஆண்டு நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நாயகனாக நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து இருந்தாலும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்களை தென்னிந்திய சினிமாவில் உள்ள ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ரணபாலி.

பீரியட் ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த ரணபாலி படத்தை இயக்குநர் ராகுல் சாங்கிருத்யன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து உள்ளார். இவர்கள் இருவரும் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோடி சேர்ந்து நடிப்பது அவர்களின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ரணபாலி படம் வருகின்ற 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ரணபாலி படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… டோரதி படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினிகாந்த் – வைரலாகும் பதிவு

ரணபாலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஷூட்டிங்கை நிறைவு செய்த இஞ்சி வெல்லம் படக்குழு… ரிலீஸ் எப்போது தெரியுமா?

Follow Us