டோரதி படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினிகாந்த் – வைரலாகும் பதிவு
Rajinikanth Praised Dorothy Movie Team | தமிழ் சினிமாவில் சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டோரோதி. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.
தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பலப் படங்கள் திரையரங்குகளில் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் பல சின்ன சின்ன பட்ஜெட் படங்கள் மக்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது அறிமுகம் இயக்குநர்களுக்கு நம்பிக்கப் ஊட்டும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி திரையரங்குகளில் வெளியான படம் டோரதி. இதுவரை தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசாத ஒரு கதையை மிகவும் துணிச்சலாக எடுத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இந்தப் படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் மற்றும் சனந்த் உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே மட்டும் இன்றி பிரபலங்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் பிரபலங்கள் பலர் இந்த டோரதி படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினர் நேரில் அழைத்து பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ரஜினிகாந்த் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




டோரதி படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினிகாந்த்:
‘அற்புதம்… மிக அழகு… அசத்தலானது’!! ‘தலைவர்’ அவர்களுக்கு ‘டோரதி’ (Dorothy) மிகவும் பிடித்துவிட்டது. படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாராட்டி அவர் ஒரு மணி நேரம் விரிவாகப் பேசினார்… இதற்கு மேல் என்ன வேண்டும்… அந்த உரையாடலையும், அவர் சொன்ன அந்த வார்த்தைகளையும் என்றென்றும் நினைவில் கொள்வேன்… “இந்தக் கார்த்திக் சுப்புராஜைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்… உங்களுக்கு என் சல்யூட் (Hat’s off)” … நான் மிகுந்த மகிழ்ச்சியில் மிதக்கிறேன் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
Also Read… சேனாதிபதி இஸ் பேக்… கமல் ஹாசனின் இந்தியன் 3 குறித்து அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு;
Thalaivaaaaa…. 🔥🔥❤️❤️
‘Fantastic..Beautiful… Mindblowing’ !!
Thalaivar Loveeedd #Dorothy and spoke in detail for an hour appreciating every aspect of the film…. Can’t ask for more…. Will forever remember the conversation & him saying…..
“Intha Karthik Subbaraja thaan thedittu irunthen… Hat’s off” … Am flying 🤗🤗
Love you Thalaiva … ❤️❤️
#ThalaivarRavesDorothy
#DorothyWinsBIG
#DorothyTheCinemaTheChange— karthik subbaraj (@karthiksubbaraj) October 10, 2026
Also Read… லீடராக இருக்கனாலவே என்னால அத பண்ண முடியாது… பிக்பாஸில் கண்ணீர்விட்ட அக்ஷிதா – வைரலாகும் வீடியோ!