தனுஷின் அரசியல் வருகை எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!
Dhanush political announcement | நடிகர் தனுஷ் தற்போது தீவிரமாக படங்களில் நடித்து வரும் நிலையில் அடுத்தடுத்து படங்களின் அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் அவர் அரசியல் வருகை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சினிமாவில் நடிகர்களாக வலம் வரும் பலர் தொடர்ந்து அரசியலில் எண்ட்ரி கொடுப்பது வழக்கமாக உள்ளது. அதில் வரும் அனைவரும் அரசியலில் வெற்றிக்கொடியை நாட்டினார்களா என்றால் அந்த எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. தமிழ் நாட்டில் எம்ஜிஆர் உச்ச நடிகராக இருக்கும் போதே தொடர்ந்து அரசியலிலும் கவனம் செலுத்தி வந்தார். இவர் முதலமைச்சராக இருந்த போதே படங்களிலும் நடித்தார். அதனைத் தொடர்ந்து அவருடன் அந்த காலக்கட்டத்தில் போட்டி நடிகராக இருந்த சிவாஜி கணேசனும் அரசியல் கட்சி தொடங்கினார். ஆனால் அவர் சினிமாவில் ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பு அரசியலில் மக்களிடையே கிடைக்கவில்லை என்பதே உண்மை. தொடர்ந்து தமிழ் நாட்டில் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் படங்களில் நடிக்கும் நடிகர்கள் பிரபலங்கள் அரசியலில் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் அரசியல் கட்சியைத் தொடங்கிய தளபதி விஜய் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். மேலும் தளபதி விஜயின் வருகையை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவது மற்றும் அரசியல் வருகை குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. இந்த பேச்சில் அதிகப்படியாக அடிபடும் பெயர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.




தனுஷின் அரசியல் வருகை எப்போது? வைரலாகும் தகவல்:
அந்த வகையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி தனுஷின் அரசியல் குறித்த அறிவிப்பும், அவர் அரசியல் கட்சியைத் தொடங்கும் நிகழ்வும் 2028-ல் நடைபெறக்கூடும். 2031-ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, தனது அரசியல் கட்சி மற்றும் தொண்டர் படையை வலுப்படுத்தவும், அரசியல் பணிகளை மேற்கொள்ளவும் இது அந்த நட்சத்திரத்திற்கு 3 ஆண்டுகளை வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்.. மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்.. திரையுலகில் பெரும் சோகம்!!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Dhanush political announcement and starting of a political party may happen in 2028. This gives 3 years for the star ⭐️ to solidify his political party, cadres and do politics before contesting in the 2031 elections.
Source – Valai Pechu https://t.co/9bk8zrtdtM
— Movies Singapore (@MoviesSingapore) October 7, 2026
Also Read… பிக்பாஸில் கடுமையாக மோதிக்கொள்ளும் அவினாஷ் – ஜேஷன்… அனல் பறக்கும் வீடியோ