AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெயிலர் 2 படத்தில் என் கேரக்டர் இப்படிதான் இருக்கும் – நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஓபன் டாக்

Suraj Venjaramoodu about Jailer 2 movie | மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ள நிலையில் அந்த கதாப்பாத்திரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஜெயிலர் 2 படத்தில் என் கேரக்டர் இப்படிதான் இருக்கும் – நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஓபன் டாக்
நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Oct 2026 15:56 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து காமெடி படங்களே வெளியானது. அதன்படி நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து கிடைக்கும் கதாப்பாத்திரங்களையே நடித்து வந்த நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பிறகு மிகவும் அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். அதன்படி நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதுமட்டும் இன்றி மலையாள சினிமாவில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் சுராஜ் வெஞ்சரமூடு தற்போது தமிழ் சினிமாவிலும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். அதன்படி அவர் கடந்த 2025-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள ஜெயிலர் 2 படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

ஜெயிலர் 2 படத்தில் என் கேரக்டர் இப்படிதான் இருக்கும்:

அதில் அவர் பேசியதாவது, எனது கதாபாத்திரத்தின் பெயர் திலீப். தோற்றம் மற்றும் நடிப்பு என இரண்டிலும் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நான் இதற்கு முன் நடித்ததில்லை. இத்தகையதொரு உலகத்தைக் கொண்ட திரைப்படத்தில் நான் இணைவது இதுவே முதல் முறை. மேலும், இப்படத்தில் மூன்று வகையான மேஜிக் (அதிசயங்கள்) உள்ளன.

முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், அடுத்ததாக அனிருத் சார் மற்றும் நெல்சன் சார். இந்த மூன்று மந்திரவாதிகளும் ஒன்றிணையும்போது, ​​அவர்கள் ஒரு மிகப்பெரிய மாயாஜாலத்தை உருவாக்குகிறார்கள். அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வந்து அதை அனுபவியுங்கள் என்று சுராஜ் வெஞ்சரமூடு தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Samantha: எனக்கு பிடித்த ஹீரோ அவர்தான்… சமந்தா சொன்ன விஷயத்தால் அதிர்ந்த அரங்கம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Scene Movie : ஆத்தி இவ யார்ரா… சூர்யாவின் சீன் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது!

Follow Us