AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அனைவரையும் ஏற்றுக்கொண்டு சமமாக நடத்த வேண்டும் என்பதை அழகாக நினைவூட்டும் படம் டோரதி – சௌந்தர்யா ரஜினிகாந்த்

Soundarya Rajnikanth talks about Dorothy movie | தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் தயாரிப்பாஅளராகவும் வலம் வருபவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் சமீபத்தில் டோரதி படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அனைவரையும் ஏற்றுக்கொண்டு சமமாக நடத்த வேண்டும் என்பதை அழகாக நினைவூட்டும் படம் டோரதி – சௌந்தர்யா ரஜினிகாந்த்
சௌந்தர்யா ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Oct 2026 16:18 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் கடந்த 25-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டோரதி. இந்தப் படத்தில் ஆணாக பிறந்து வளரும் ஒருவர் திருநங்கையாக மாறும் போது அவரது வாழ்க்கையிலும் அவரைச் சுற்றி உள்ள நபகர்களுக்கும் என்ன எல்லாம் நடக்கிறது என்பதை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மட்டும் இன்றி படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பையும் தொடர்ந்து ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று டோரதி படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார். இந்த நிலையில் அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் டோரதி படத்தைப் பார்த்துவிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதை அழகாக காட்டும் படம் டோரதி:

அதில் கூறியதாவது, டொரொத்தி (Dorothy) கதாபாத்திரம் மிகுந்த உணர்வுபூர்வமான மற்றும் ஆழமான தன்மையைக் கொண்டுள்ளது. இந்தக் கதையின் கதாபாத்திரங்கள் வாழும் உலகத்திற்குள் நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். அனைவரையும் ஏற்றுக்கொண்டு சமமாக நடத்த வேண்டும் என்பதை நினைவூட்டும் ஒரு அழகான படைப்பு இது. ஒரு தயாரிப்பாளராக, கோவா மற்றும் லவ் போன்ற படைப்புகள் மூலம் LGBTQ+ சமூகத்தைச் சார்ந்த கதைகளை நான் முன்னெடுத்துள்ளேன். இச்சமூகத்தை மதிப்பதில் நான் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளேன்; அவர்களுக்கு என்றும் உறுதுணையாக நிற்பேன்.

இப்படத்தை உருவாக்கியதற்காக என் நண்பர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துகள். சனந்த், உங்கள் நடிப்பு மிகச் சிறப்பாகவும், அபாரமாகவும் இருந்தது. ரிஷிகாந்த், உங்களுக்குப் பலப்பல வாழ்த்துகள். இந்த ஆண்டு உங்களுக்கு எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கிறது என்பதைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்.

Also Read… Vijay Antony: தீபாவளி லாக்.. சூர்யாவின் சீன் படத்துடன் மோதும் விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி!

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Vidya Balan: ஒரு அச்சமற்ற கதாபாத்திரம்… ஜெயிலர் 2 படத்தில் தனது வேடம் பற்றி பேசிய வித்யா பாலன்!

Follow Us