டோரதி படத்திலிருந்து வெளியானது கனகமணி பாடலின் லிரிக்கள் வீடியோ
Kanagamani Lyric Video From Dorothy Movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டோரதி. இந்தப் படத்தில் இருந்து கனகமணி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் இயக்கிய படம் இந்த சமூகத்தில் நிலவும் ஒரு ஆழமான உணர்வை மையமாக வைத்து இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் டோரதி. இந்தப் படத்தில் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த், ராமச்சந்திரன் துரைராஜ், சௌந்தரராஜா, முத்தழகி, ஜீவா சுப்ரமணியன், முத்துக்குமார், சுப்புராஜ் மற்றும் ஹரிசங்கர் நாராயணன் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.
இந்தப் படம் கடந்த 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானதில் இருந்து படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




டோரதி படத்திலிருந்து வெளியானது கனகமணி பாடலின் லிரிக்கள் வீடியோ:
இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் இருந்து கனகமணி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… அலப்பறை கிளப்புறோம்… தலைவரு நிரந்தரம்… டிக்கெட் முன்பதிவை தொடங்கியது ஜெயிலர் 2 படக்குழு!
டோரதி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Kanagamani Lyric video is Out now..
The Song you all have been asking from #Dorothy
A @ilaiyaraaja Sir Musical
https://t.co/CKjsv3jY6Y
#DorothyWinsBIg
#Dorothy3rdWeek— karthik subbaraj (@karthiksubbaraj) October 10, 2026