AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அந்த தெலுங்கு சினிமா நடிகரை இயக்க உள்ளாரா? வைரலாகும் தகவல்

Director Karthik Subbaraj | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவர் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய நடிகரை வைத்து படம் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அந்த தெலுங்கு சினிமா நடிகரை இயக்க உள்ளாரா? வைரலாகும் தகவல்
கார்த்திக் சுப்பராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Oct 2026 16:03 PM IST

தமிழ் சினிமாவில் பீட்சா என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படதை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்  இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டோரதி. திருநங்கைகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் அவர்களின் மாற்றம் குறித்தும் இந்தப் படம் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் என்ன என்பது குறித்து இணையத்தில் செய்திகள் பரவி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமவில் உள்ள உச்ச நடிகரை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் படம் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கார்த்திக் சுப்பராஜ் அந்த தெலுங்கு சினிமா நடிகரை இயக்க உள்ளாரா?

அதன்படி தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் தற்போது இயக்குநர் பாபி இயக்கத்தில் காகா என்ற படத்தில் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியிடம் ஒரு கதையை விவரித்துள்ளார். இந்தக் கூட்டணி அமைந்தால், இவர்களிடமிருந்து எந்த வகையான திரைப்படம் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சேனாதிபதி இஸ் பேக்… கமல் ஹாசனின் இந்தியன் 3 குறித்து அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… லீடராக இருக்கனாலவே என்னால அத பண்ண முடியாது… பிக்பாஸில் கண்ணீர்விட்ட அக்‌ஷிதா – வைரலாகும் வீடியோ!

Follow Us