Vidya Balan: ஒரு அச்சமற்ற கதாபாத்திரம்… ஜெயிலர் 2 படத்தில் தனது வேடம் பற்றி பேசிய வித்யா பாலன்!
Vidya Balan Role In Jailer 2: பான் இந்திய மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வித்யா பாலன். இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இவரின் கதாபாத்திரம் இப்படத்தில் எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி விளக்கமாக தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த பான் இந்திய ரசிகர்களும் எதிர்பாத்துவரும் பிரம்மாண்ட திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இதை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாகவே இந்த ஜெயிலர் 2 படமானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திலும் ரஜினி ஹீரோவாக நடிக்க, அவருடன் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இதில் எஸ்.ஜே.சூர்யா (SJ Suryha), சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் வித்யா பாலன் (Vidya Balan) போன்ற புது நடிகர்களும் இதில் இணைந்துள்ளனர். இந்த படமானது பான் இந்திய திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் “காந்தா” (Kantha) என்ற வேடத்தில் நடித்துள்ளார்.
இவரின் கதாபாத்திர அறிமுக வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் 2 நேர்காணல் நிகழ்ச்சியிலும் இவர் கலந்துகொண்டார். அப்போது பேசிய வித்யா பாலன், ஜெயிலர் 2 படத்தில் தனது கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் என் கேரக்டர் இப்படிதான் இருக்கும் – நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஓபன் டாக்




ஜெயிலர் 2 படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தெரிவித்த நடிகை வித்யா பாலன்:
ஜெயிலர் 2 படத்தின் நேர்காணலில் பேசிய நடிகை வித்யா பாலன், அதில் “காந்தா, எல்லாவற்றிற்கும் மேலாகத் தன் குடும்பத்திற்கு மதிப்பளிக்கும் ஒரு அச்சமற்ற கதாபாத்திரம். தன் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவள் எதையும் செய்வாள், மேலும் தன் வழியில் யார் நின்றாலும் அவள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பது போன்று அந்த கதாபாத்திரம் இருக்கும்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் அனிருத்துக்குத்தான் பெரும் மன அழுத்தம் – ரஜினிகாந்த் பேச்சு!
நடிகை வித்யா பாலனின் காந்தா கதாபாத்திர வீடியோ கடந்த சில நாட்களுக்கும் முன் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த அறிமுக வீடியோவில் தனது கையில் சிகிரெட் உடன் வித்யா பாலன் இருந்த காட்சியானது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக இருந்தது.
ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் கதாபாத்திர அறிமுகம் குறித்து வெளியான பதிவு:
ஜெயிலர் 2 படமானது பான் இந்திய மொழிகளில் ஒருவாக்கப்பட்டுள்ள நிலையில், யு/ஏ 16+ என்ற சென்சார் கிடைத்துள்ளது. இப்படத்தை 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே திரையரங்குகள் சென்று பார்க்கமுடியும். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் சிறப்பாக தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.