Rajinikanth: ஜெயிலர் 2 படத்தில் அனிருத்துக்குத்தான் பெரும் மன அழுத்தம் – ரஜினிகாந்த் பேச்சு!
Rajinikanth Praises Anirudhs Dedication: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் ஜெயிலர் 2 படமானது வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் இப்படத்தின் நேர்காணல் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் ஜெயிலர் 2 படத்தில் அனிருத்துக்கு இருந்த கஷ்டம் குறித்து பேசியுள்ளார்.
பான் இந்திய ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் முன்னணி நட்சத்திர நாயகனாகவும், சூப்பர்ஸ்டாராகவும் (Super Star) அறியப்படுபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் கூலி (Coolie) திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பையே கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பின் தலைவர் 172வது படமாக உருவாகிவந்ததுதான் ஜெயிலர் 2 (Jailer 2) . இதை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயங்கிவந்த நிலையில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில், இதன் புரோமோஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தின் நேர்காணல் நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட நிலையில், அதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அதில் அவர் ஜெயிலர் 2 படத்திற்காக அனிருத் (Anirudh) பட்ட கஷ்டங்கள் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஷூட்டிங்கை நிறைவு செய்த இஞ்சி வெல்லம் படக்குழு… ரிலீஸ் எப்போது தெரியுமா?
ஜெயிலர் 2 திரைப்படம் குறித்து அனிருத் பகிர்ந்த எக்ஸ் பதிவு:
#Jailer2 full album with 12 tracks is all yours 🤘🏻🕺💃
https://t.co/hFiRUrMAaS
Love you all ❤️🙏🏻
Superstar @rajinikanth @Nelsondilpkumar @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss #Jailer2FromOct15
— Anirudh Ravichander (@anirudhofficial) September 30, 2026
ஜெயிலர் 2 படத்திற்காக அனிருத் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசிய ரஜினிகாந்த்:
எம்.எஸ்.வி… இளையராஜா… ஏ.ஆர்.ரஹ்மான்… அனிருத். ஜெயிலர் 2 படத்தில் அனிருத்துக்குத்தான் பெரும் மன அழுத்தம் இருந்தது. அவர் ஏற்கனவே வெளிநாடுகளில் தனது இசை நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்டிருந்தார். தி பாரடைஸ் திரைப்படம் பின்னர் வெளியாகும் என இருந்தது, ஆனால் அது முன்கூட்டியே வெளியானது. அதனால், இசை நிகழ்ச்சிகளையும் பாரடைஸ் படத்தின் பணிகளையும் முடித்த பிறகு, அவர் ஜெயிலர் 2 படத்திற்கு பின்னணி இசை அமைக்க வந்தார்.
இதையும் படிங்க: அலப்பறை கிளப்புறோம்… தலைவரு நிரந்தரம்… டிக்கெட் முன்பதிவை தொடங்கியது ஜெயிலர் 2 படக்குழு!
படக்குழு எல்லோரும் பதற்றமடைந்தனர். தற்போது ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் அருமையான பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்திருந்தாலும், அவர் எம்.எஸ் பயோபிக் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, அதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்திருந்தார்.