AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Vijay Antony: தீபாவளி லாக்.. சூர்யாவின் சீன் படத்துடன் மோதும் விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி!

Appa Kutty Movie: தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான இசையமைப்பாளராகவும், நடிகராகவும் அறியப்படுபவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சிறப்பான பீல் குட் கதைக்களத்தில் உருவாகிவந்த படம்தான் அப்பா குட்டி. இந்த 2026ம் ஆண்டு அக்டோபரில் இப்படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Vijay Antony: தீபாவளி லாக்.. சூர்யாவின் சீன் படத்துடன் மோதும் விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி!
அப்பா குட்டி படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Oct 2026 21:14 PM IST

கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்து மக்கள் மத்தியில் பெயர்போனவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவர் கடந்த 2012ம் ஆண்டில் நான் (Naan) என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகனாக நுழைந்தார். இந்த படமானது இவருக்கு மக்கள் மத்தியில் நடிகர் என்ற பிரபலத்தை கொடுத்தது. இதன் பிறகு தமிழில் நடிகராகவே படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். ஆனாலும் தனது இசையமைப்பு பணிகளையும் அவர் விடவில்லை. இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பல்வேறு பணிகளை இவர் செய்துவருகிறார். இறுதியாக இவரின் நடிப்பிலும் தயாரிப்பிலும் நூறு சாமி (Nooru Saami) என்ற படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் இவரின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் புதிய படம்தான் அப்பா குட்டி (Appa Kutty).

இந்த படத்தை இயக்குநர் மு.மாறன் இயக்க, விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கியுள்ளார். இப்படமானது 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த தேதி சூரியாவின் சீன் படம் வெளியாகவும் அதே தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஷ்ணு விஷால் – மமிதா பைஜூவின் இரண்டு வானம் படம் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைப்பு!

சூர்யாவின் படத்துடன் மோதும் விஜய் ஆண்டனி:

நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பிலும் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம்தான் சீன். இதை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் பானையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.

இதையும் படிங்க: எஸ்.ஜே. சூர்யா ஒரு நடிப்பு அரக்கன் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இந்நிலையில் இப்படமானது வெளியாகும் இதே தேதியில் விஜய் ஆண்டனி நடித்து தயாரித்துள்ள அப்பா குட்டி படமும் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த இரு படங்களுக்கும் இடையே மோதல்கள் இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அப்பா குட்டி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விஜய் ஆண்டனி வெளியிட எக்ஸ் பதிவு:

இந்த அப்பா குட்டி படத்தை இயக்குநர் மு.மாறன் இயக்கியுள்ள நிலையில், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கிஸ் மற்றும் 29 போன்ற படங்களில் நடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் ஜன நாயகன் படத்தில் குழந்தை மமிதாவாக நடித்த சிறுமியும் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இப்படமானது அப்பா மற்றும் பெண் குழந்தையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள படமாக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது

Follow Us