AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பாக்கெட் நாவெல் படத்தின் ஷூட்டிங் முடிந்தது… விஜய் சேதுபதி வெளியிட்ட பதிவு

Pocket Novel Movie Shoot Wrap | நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் வரிசையாக தொடர்ந்து படங்கள் உருவாகி வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி உள்ள பாக்கெட் நாவெல் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.

பாக்கெட் நாவெல் படத்தின் ஷூட்டிங் முடிந்தது… விஜய் சேதுபதி வெளியிட்ட பதிவு
பாக்கெட் நாவெல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Oct 2026 15:19 PM IST

தமிழ் சினிமாவில் சில அழுத்தமான கதைகளை எழுதி இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநர்கள் உள்ளனர். அப்படி மக்களுக்கு மிகவும் நெறுக்கமான அழுத்தமான கதைகளை எழுதி இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இவர் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான ஆரண்ய காண்டம் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது வரை பல பிரபலங்கள் இந்த ஆரண்ய காண்டம் படத்தை பாராட்டி பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தை இயக்கினார். படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மார்டன் லவ் சென்னை என்ற இணையதள தொடரை இயக்கினார். தற்போது சுமார் 7 ஆண்டுகளுக்கும் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் படத்தை இயக்குகிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

பாக்கெட் நாவெல் படத்தின் ஷூட்டிங் முடிந்தது:

அதன்படி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் பாக்கெட் நாவெல். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை மாளவிகா மோகனன் நாயகியாக நடித்து உள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் பாக்கெட் நாவெல் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

Also Read… ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜ்: நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த்

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கமல்ஹாசனின் இந்தியன் 3 பட கதை இப்படியா இருக்கும் – இணையத்தில் வைரலாகும் தகவல்!

Follow Us