AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ramya Krishnan: ராஜ மாதாவின் வருகை.. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுக்கும் ரம்யா கிருஷ்ணன்!

Bigg Boss Season 10 New Host; தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி விறுவிறுப்பாகி நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இதை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுப்பாளராக தொகுத்துவருகிறார். அந்த வகையில் இந்த வாரத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுக்கிறாராம். அது குறித்த ப்ரோமோவை பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ளது.

Ramya Krishnan: ராஜ மாதாவின் வருகை.. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுக்கும் ரம்யா கிருஷ்ணன்!
ரம்யா கிருஷ்ணன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Oct 2026 15:23 PM IST

விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) சிறப்பாக ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த் நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிலையில், எவிக்ஷன் மற்றும் வைல்ட் கார்ட் என்ட்ரி-யுடன் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியை கடந்த 6 வாரங்களாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக தொகுத்துவந்த நிலையில், தற்போது மற்றொரு பிரபலம் தொகுப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிவந்தது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) தொகுக்கவுள்ளதாக பிக் பாஸ் குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: டிடிஃஎப் வாசன் எப்படியாச்சும் ரெட் கார்ட் வாங்கணும்.. மாஸ்டர் பிளான் போடும் முகேஷ் – என்ன நடக்குது பா?

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை தொகுப்பாளராக தொகுக்கும் ரம்யா கிருஷ்ணன்:

கடந்த 3 சீசன்களாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்துவந்தார். அதற்கு முன் உலகநாயகன் கமல்ஹாசன், மேலும் பிக் பாஸ் அன்லிமிடேட் என்ற நிகழ்ச்சியாக சிலம்பரசன் தொகுத்துவந்தார். இந்நிலையில் இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை இந்த வாரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக தொகுக்கவுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 48வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தவாரத்தில் சர்வைவல் டாஸ்கானது நடைபெற்றிருந்தது. இந்த டாஸ்கில் ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் இடையே போட்டிகள் இருந்தது. இதில் டாஸ்கில் ப்ளூ டீம் வெற்றிருந்தாலும், ரெட் டீம் கலகலப்பாக மற்றும் ஜாலியாக இந்த வாரத்தை கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: பிக்பாஸில் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக வரும் பிரபல நடிகை… வைரலாகும் தகவல்

அந்த விதத்தில் இந்த வாரத்தின் தொகுப்பாளராக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுக்கும் நிலையில், எவர் எவ்வாறு கேள்விகளை எழுப்பப்போகிறார் இந்த வாரம் எவ்வாறு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us