AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தானம் இருக்கும் வீடியோ!

Santhanam at Jailer 2 shooting spot : ஜெயிலர் 2 படத்தில் நடிகர் சந்தானம் நடித்து உள்ளார் என்பதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆனால் அவரது காட்சிகள் ஜெயிலர் 2 படத்தில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தானம் இருக்கும் வீடியோ!
சந்தானம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Oct 2026 14:38 PM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் சந்தானம் (Actor Santhanam). இவர் காமெடியனாக நடித்துக்கொண்டு இருந்த போதே அவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அது மட்டும் இன்றி பலப் படங்களில் கதை சரியாக இல்லாமல் இருந்தாலும் சந்தானத்தின் காமெடிக்காகவே படம் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காமெடியனாக பல ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர் சந்தானம் பிறகு தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து தற்போது வரை சந்தானத்தின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தமிழ் சினிமாவில் அவர் காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பதை தவிர்ந்து வந்தார் நடிகர் சந்தானம். தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் சிம்புவின் படத்திற்காக சிம்புவிற்காக காமெடி கதாப்பாத்திரத்தை ஏற்று நடிப்பதாக தெரிவித்தார். பிறகு ஜெயிலர் படத்திலும் ஒரு சின்ன வேடத்தில் நடித்து இருந்ததாக கூறப்பட்டது.

ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தானம்:

ஆனால் ஜெயிலர் 2 படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் அந்தப் படத்தில் நடிகர் சந்தானத்தின் காட்சிகள் ஒன்று கூட இடம்பெறவில்லை. இதனால் அவர் நடித்தாரா இல்லையா என்பது கேள்விகுறியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகை வித்யா பாலனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைப்பெற்ற போது அந்த இடத்தில் சந்தானமும் இருக்கிறார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… தீபாவளிக்கு அரசன் படம் வெளியிடும் முக்கிய அப்டேட்? வைரலாகும் தகவல்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… என்ன நடக்குது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில்? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

Follow Us