AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Mookuthi Amman 2: அவ வரப்போறா… மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து வேர்ல்ட் ஆப் மஹாசக்தி வீடியோ வெளியானது!

World Of Mahasakthi: தமிழ் சினிமாவில் மக்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டுவரும் நடிகைதான் நயனதாரா. இவர் சுந்தர் சி இயக்கத்தில் நடித்துவந்த புதிய திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கிய நிலையில், தற்போது இப்படத்திலிருந்து World Of Mahasakthi என்ற வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

Mookuthi Amman 2: அவ வரப்போறா… மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து வேர்ல்ட் ஆப் மஹாசக்தி வீடியோ வெளியானது!
வேர்ல்ட் ஆப் மஹாசக்தி வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Oct 2026 12:35 PM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்துவருபவர்தான் நடிகை நயன்தாரா (Nayanthara). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிறது. இறுதியாக தமிழில் இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஹாய் (Hi Movie). இதில் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2). இதை தமிழ் இயக்குநர் சுந்தர் சி (Director Sundar C) இயக்கியுள்ள நிலையில், மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா, சுனில், ஊர்வசி, ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த விதத்தில் இப்படத்திலிருந்து “வேர்ல்ட் ஆப் மஹாசக்தி” (World Of Mahasakthi) என்ற வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவானது ஏற்கனவே ஜெயிலர் 2 படத்துடன் திரையரங்குகளில் பகிரப்பட்ட நிலையில், தற்போது இணையதளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ரா ரா ரா ராவணா… ராமாயணா படத்திலிருந்து வெளியான ‘ராவண தாண்டவம்’ பாடல்!

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து World Of Mahasakthi குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

இந்த வீடியோவில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கதைகளை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமான போலீஸ் அதிகாரியாக நடித்த நயன்தாரா, எவ்வாறு அம்மனாக உருவெடுக்கிறார். மேலும் முன்புள்ள காலத்தில் அரக்கர்கள் மற்றும் சூனியக்காரி என ஒருவிதமான பேண்டஸி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த விதத்தில் இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் ‘World Of Mahasakthi’ வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சந்தானத்தின் 20வது திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 பட ரிலீஸ்:

இந்த படமானது முற்றிலும் பேண்டஸி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் மீது மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தை சுந்தர் சி சிறப்பான கதையில் அமைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விதத்தில் வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us