AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளிக்கு அரசன் படம் வெளியிடும் முக்கிய அப்டேட்? வைரலாகும் தகவல்!

Arasan Movie Promo Update | நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் அரசன். இந்தப் படத்தில் இருந்து முக்கிய அப்டேட் ஒன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தற்போது தகவல்கள் வைரலாகி வருகின்றது.

தீபாவளிக்கு அரசன் படம் வெளியிடும் முக்கிய அப்டேட்? வைரலாகும் தகவல்!
அரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Oct 2026 08:30 AM IST

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் அரசன். இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தினை எழுதி இயக்கி வருகிறார். முன்னதாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக சிலம்பரசன் உடன் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி வைத்துள்ள இந்தப் படமும் மாபெரும் வெற்றியைப் பெறும் என்று சிம்புவின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தொடர்ந்து கடந்த 2025-ம் ஆண்டின் இறுதியில் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து அவ்வபோது படம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதில் நெல்சன் கேமியோ செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் இந்த அரசன் படம் இந்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடியாத காரணத்தால் இந்த ஆண்டில் வெளியாகாது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தீபாவளிக்கு அரசன் படம் வெளியிடும் முக்கிய அப்டேட்?

தீபாவளியை முன்னிட்டு அரசன் திரைப்படத்தின் சிறப்பு விளம்பரக் காணொளி (promo) வெளியாகத் தயாராக உள்ளது. இப்படத்தின் காட்சிகளுடன், இதற்கெனவே பிரத்யேகமாகப் படமாக்கப்பட்ட காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த விளம்பரக் காணொளி வெளியான பிறகு, படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிக்பாஸில் சூடுபிடிக்கும் இந்த வாரம் டாஸ்க்… வைரலாகும் புரோமோ வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Scene Movie: ஹபீபி கம் டூ துபாய்.. சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி அறிவிப்பு!

Follow Us