AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் சூடுபிடிக்கும் இந்த வாரம் டாஸ்க்… வைரலாகும் புரோமோ வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து டாஸ்கில் போட்டியாளர்கள் முனைப்புடன் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கின்றது.

பிக்பாஸில் சூடுபிடிக்கும் இந்த வாரம் டாஸ்க்… வைரலாகும் புரோமோ வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Oct 2026 14:07 PM IST

தமிழ் சின்னத்திரையில் தற்போது அதிக அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10. இந்த நிகழ்ச்சி தொடங்கி தற்போது 44 நாட்கள் முடிவடைந்து 45-வது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் புது புது டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் டாஸ்குகளைப் பார்க்கும் போது இந்த சீசன் மிகவும் சிறபபனதாக இருக்கிறது என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட இந்த சீசன் அதிக அளவில் மக்களை கவரும் வகையில் டாஸ்குகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 7-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் சர்வைவல் பேட்டல் டாஸ்க்கை விளையாடி வௌர்கின்றனர்.

வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து இந்த டாஸ்கை விளையாடி வருகின்றனர். அதில் வெற்றி பெறும் அணிக்கு சலுகைகள் அதிகமாக வலங்கப்பட்டு வருகின்றது. அதே நேரத்தில் தோல்வி அடையும் அணியினருக்கு பேசிக் தேவைகள் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் சூடுபிடிக்கும் இந்த வாரம் டாஸ்க்… வைரலாகும் வீடியோ:

இப்படி இருக்கும் நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று 45-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் வீட்டில் உள்ள இரண்டு அணிகள் ஒரே மதிப்பெண்களில் உள்ளனர். அப்போது இருவருக்கும் ஒரு டை ப்ரேக்கர் விளையாட்டு நடைபெறுகின்றது. அந்த விளையாட்டில் நீல நிற அணி வெற்றியைப் பெறுகின்றது. இவர்கள் சிவப்பு நிற அணியினருக்கு கிட்சனை தடை செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு உணவு கிடைப்பதே மிகவும் சிரமமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… க்ரைம் த்ரில்லர் பாணியில் அர்ஜுன் தாஸின் புது படத்தின் டைட்டில் இதுதான் – வைரலாகும் அப்டேட்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இன்று மாலை வெளியாகிறது ஓம் படத்திலிருந்து வீழா வீரா பாடல் – உற்சாகத்தில் ரசிகர்கள்

Follow Us