AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராகவ்? என்ன காரணம்

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கிய போது முதல் வாரத்தில் உடல் நலக் குறைவு காரணமாக ப்ளாக் பாண்டி வீட்டில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் ராகவ் தற்போது வீட்டில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராகவ்? என்ன காரணம்
ராகவ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Oct 2026 12:18 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06-ம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இதுவரை 41 நாட்கள் நிறைவடைந்து 42-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் மொத்தம் 19 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதில் முதல் வாரம் கோலாகலமாக தொடங்கிய நிலையில் வீட்டில் இருந்து ப்ளாக் பாண்டி உடல்நலக் குறைவு காரணமாக வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து மொத்தம் 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் முதல் வாரம் ஒரு வைல்கார்ட் போட்டியாளர் இரண்டாம் வாரம் ஒரு வைல்கார்ட் போட்டியாளர் உள்ளே அனுப்பட்டனர். தொடர்ந்து நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருந்த நிலையில் 4-வது வார இறுதில் மொத்தம் மூன்று போட்டியாளர்கள் ப்க்க்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்ட்டனர்.

தொடர்ந்து இதுவரை மொத்தம் 5 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இந்த 6-வது வாரம் 18 போட்டியாளர்களுடன் விளையாட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் யார் போட்டியில் இருந்து வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராகவ்? என்ன காரணம்:

அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் ராகவ் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நிகழ்ச்சியில் அவர் தொடரமுடியவில்லை என்றும், அதன் காரணமாகவே போட்டியில் இருந்து ராகவ் பாதியிலேயே சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த செய்தி தற்போது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகினர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அனிருத் – காவ்யா மாறன் திருமணம்… முதலமைச்சர் விஜய்க்கு நேரில் அழைப்புவிடுத்த கலாநிதிமாறன் – வைரலாகும் போட்டோஸ்!

Follow Us