பிக்பாஸில் டிடிஎஃப் வாசனின் கேம் ப்ளே… கோட்டைவிட்ட போட்டியாளர்கள் – வைரலாகும் விஜய் சேதுபதியின் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 6-வது வாரம் முடிவை எட்டியுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதி வாரம் முழுவதும் நடைப்பெற்ற விசயங்களை போட்டியாளர்களிடையே பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சி 9 சீசன்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது 10-வது சீசன் தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. முந்தைய சீசன்களில் இல்லாத பல புதுப் புது விசயங்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தற்போது 6- வாரங்கள் முடிவடைய உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்கள் நிகழ்ச்சி தொடங்கிய போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில் மொத்தம் 5 போட்டியாளர்கள் வைல்கார்ட் போட்டியாளராக உள்ளே சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வைல்கார்ட் போட்டியாளர்களுடன் இணைந்து மொத்தம் 18 போட்டியாளர்கள் 6-வது வார இறுதியில் எஞ்சியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த 6-வது வார தொடக்கத்தில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு டாஸ்குகள் கொடுக்கப்பட்டது. இந்த இரண்டிலும் போட்டியாளர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் போட்டியில் யார் வெற்றிப்பெற்றனர் என்பது குறித்தும் இன்று தெரியவர உள்ளது.




பிக்பாஸில் டிடிஎஃப்-வின் கேம் ப்ளே… கோட்டைவிட்ட போட்டியாளர்கள்:
அதன்படி இன்று சனிக்கிழமை 41-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் விளையாட்டே தெரியவில்லை என்று கூறிய டிடிஎஃப் வாசன் ஒரு ஆட்டத்தை ஆடினார் என்றும் விளையாட்டு குறித்து விளக்கமாக பேசிய போட்டியாளர்கள் என்ன ஆட்டம் ஆடினார்கள் என்று கண்டிப்புடன் கூற உள்ளதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Vidyut Jammwal: இந்த ஜெனரேஷனின் ஆக்ஷன் ஹீரோ.. சிவகார்த்திகேயனை புகழ்ந்த வித்யுத் ஜாம்வால்!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day41 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) October 17, 2026
Also Read… Jailer 2: தலைவரு நிரந்தரம்… ஜெயிலர் 2 படத்தின் FDFS காட்சியை பார்த்து வாழ்த்திய தமிழ் பிரபலங்கள்!