AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்திற்கு கிடைத்த சென்சார் இதுதான் – வைரலாகும் தகவல்

Ranabaali Movie Censor Update | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் வெளியாக உள்ள ரணபாலி படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்திற்கு கிடைத்த சென்சார் இதுதான் – வைரலாகும் தகவல்
ரணபாலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Oct 2026 14:59 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தெலுங்கு சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்தப் படஙகள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் இறுதியாக தெலுங்கு சினிமாவில் வெளியான படம் கிங்டம். இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து சிங்கீதம் என்ற படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா கேமியோ வேடத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு சினிமாவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ரணபாலி.

ஹிஸ்டாரிக்கள் ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த ரணபாலி படத்தை இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடிகர்கள் ரஷ்மிகா மந்தனா, அர்னால்ட் வோஸ்லூ, லூக் மெக்கிப்னி, ஈஸ்வரி ராவ், மைம் மது மற்றும் ஜேசன் ஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

ரணபாலி படத்திற்கு கிடைத்த சென்சார் இதுதான்:

மேலும் இந்தப் படம் நாளை 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ரணபாலி படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் திருடுபோன வைரம்… சந்தேகத்தின் வலையில் சிக்கிய போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ

ரணபாலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜெயிலர் 2 படத்தின் FDFS காட்சியைப் பார்த்த ஓஜி ஃபேன் பாய் தனுஷ் – வைரலாகும் போட்டோஸ்!

Follow Us