AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் ப்ளான் போட்டமாதிரி வைரத்தை திருடி மறைத்த டிடிஎஃப் வாசன் – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் டைமண்ட் ஹீய்ஸ்ட் டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. நேற்று இந்த டாஸ்க் தொடங்கிய போது டிடிஎஃப் வாசன் அதனை திருட திட்டமிட்டு இருந்த நிலையில் இன்று அதனை திருடிவிட்டார்.

பிக்பாஸில் ப்ளான் போட்டமாதிரி வைரத்தை திருடி மறைத்த டிடிஎஃப் வாசன் – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Oct 2026 16:52 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து வாரம் வாரம் புதுப் புது டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு டாஸ்குகளும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு மட்டும் இன்றி பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 6-வது வாரத்திற்கான டாஸ்குகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் டைமண்ட் டாஸ்க் மற்றும் டான்ஸ் மாரத்தான் என இரண்டு டாஸ்குகளும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் டைமண்ட் டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் திருடர்கள். அவர்கள் யார் வேண்டுமானாலும் திருடலாம் என்று தெரிவிக்கப்பட்டுளது. மேலும் இந்த டாஸ்குடனே டான்ஸ் மாரத்தானும் நடைப்பெற்று வருகின்றது. இதனால் போட்டியாளர்கள் இடையே டிஸ்ட்ராக்‌ஷனும் ஏற்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று டைமண்ட் ஹீய்ஸ்ட் டாஸ்க் தொடங்கிய போதே பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் போட்டியாளர் டிடிஎஃப் வாசன் டைமண்ட்டை திருடிய பிறகு எந்த இடத்தில் தான் மறைத்து வைக்க திட்டமிடுவதாக ஒரு திட்டத்தை கேமரா முன்பு தெரிவித்துக்கொண்டு இருந்தார். அதனை அவர் எப்படி சாத்தியப்படுத்தப்போகிறார் என்ற எண்ணம் இருந்தது.

பிக்பாஸில் ப்ளான் போட்டமாதிரி வைரத்தை திருடி மறைத்த டிடிஎஃப் வாசன்:

இந்த நிலையில் இன்றைய நாளிற்கான புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது மூன்றாவது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் இந்த வீடியோவில் நேற்றைய எபிசோடில் டிடிஎஃப் வாசன் திட்டமிட்டபடி இன்று வைரத்தை திருடி மறைத்து வைக்கிறார். வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு யார் திருடினர் என்பதே தெரியவில்லை. இப்படி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் கண்டுபிடிப்பார்களா இல்லையா என்பது தெரியவரும்.

Also Read… Vijay Antony: விஜய் ஆண்டனியின் அப்பா குட்டியின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நட்பின் பிரிவா? சாதிகா மற்றும் முகேஷ் இடையே ஏற்பட்ட சங்கடம் – வைரலாகும் ப்ரோமோ!

Follow Us