Vijay Antony: விஜய் ஆண்டனியின் அப்பா குட்டியின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!
Appa Kutti Movie: தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்துவருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிகராக சினிமாவில் நடித்துவரும் நிலையில், இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் படம்தான் அப்பா குட்டி. இந்த படமானது சிறப்பான 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. தற்போது இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமானது கைப்பற்றியுள்ளது.
தென்னிந்திய மக்கள் மத்தியில் இசையமைப்பாளராக பேமசானவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் 2026ம் ஆண்டு 2வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம் அப்பா குட்டி (Appa Kutti). இந்த படத்தை இயக்குநர் மு. மாறன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, நடிகராக, இசையமைப்பாளராக மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி (Preeti Asrani) நடித்துவருகிறார். இந்த படமானது அப்பா மற்றும் பெண் குழந்தையின் கதையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளதாம்.
இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், இப்படத்தின் தமிழக திரையரங்கு ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமானது வாங்கியுள்ளதாம். அது குறித்த எக்ஸ் பதிவை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: மலையாள சினிமாவில் இந்த ட்ரைவிங் லைசன்ஸ் படத்தை பார்த்து இருக்கீங்களா? மிஸ் செய்யாதீர்கள்!
அப்பா குட்டி படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்:
விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி என்ற படத்தை இயக்குநர் மு மாறன் இயக்கியுள்ள நிலையில், இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் ஹீரோவாகவும் இவர் நடித்துள்ளார். இதில் ப்ரீத்தி அஸ்ரானி நடிகையாக நடித்துள்ள நிலையில், அவருடன் முக்கியமான வேடத்தில் லிதான்யா நடித்துள்ளார். இவர் ஜன நாயகன் படத்தில் குழந்தை மமிதா பைஜூவாக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மொத ராத்திரி படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்திய சிவகார்த்திகேயன் – வைரலாகும் பதிவு!
இப்படமானது 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் நிறுவனமானது கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான பதிவை விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தி பகிர்ந்துள்ளார்.
அப்பா குட்டி படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய நிறுவனம் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
Glad to have #FiveStarSenthil on board for the Tamil Nadu distribution of #AppaKutti ❤️
Coming to cinemas worldwide on November 6, 2026. 🌍
#DiwaliRelease #TamilCinema
@Preethioffl @haripriyaa_off @actorbucks @Aruvimadhan @actormuthukumar @dhivakargj @lizzieantony @MunnarRamesh @sugaa14 @puthiyaparithi @mahesh25071985 #thamuruganandam @ProRekha @PROSaiSatish #DigitallyPowerful
— vijayantony (@vijayantony) October 13, 2026
இந்த படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதன் முதல் சிங்கிள் மற்றும் டீசர் தொடர்பான அப்டேட்டுகளும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இறுதியாக நூறு சாமி என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்த நிலையில், இது ஹிட்டானது. அது போலவே இப்படமும் வரவேற்கப்படும் என கூறப்படுகிறது.