AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மொத ராத்திரி படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்திய சிவகார்த்திகேயன் – வைரலாகும் பதிவு!

Sivakarthikeyan Applauds Modha Rathiri Team: தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவர் புதிய படங்களில் பிசியாக நடித்துவருகிறார். இவர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான மொத ராத்திரி படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். இது தொடர்பான பதிவு இணையத்தில் பரவிவருகிறது.

மொத ராத்திரி படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்திய சிவகார்த்திகேயன் – வைரலாகும் பதிவு!
மொத ராத்திரி படக்குழுவை பாராட்டிய சிவகார்த்திகேயன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Oct 2026 16:58 PM IST

தமிழில் கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் 21ம் தேதியில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் மொத ராத்திரி (Modha Rathiri). இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி (Raja Karuppasamy)இயக்கியிருந்த நிலையில், இதில் நடிகர் ரிஷிகாந்த் (Rishikanth) மற்றும் அனிஷிமா அனில்குமார் (Anishma Anilkumar) இணைந்து நடித்திருந்தனர். சிறப்பான மற்றும் நகைச்சுவையான கதைக்களத்தில் இந்த படமானது வெளியாகியிருந்தது. இப்படத்தின் கதையானது திருமணமான முதல் நாளின் இரவில் நடக்கும் நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இந்த படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிலம்பரசன் (Silambarasan) முதல் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் வாழ்த்தி பதிவுகளை வெளியிட்டிருந்தனர். அந்த வகையில் இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 2 மாதமாகியுள்ளது.

மேலும் தற்போது இப்படமானது ஓடிடியிலும் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) இப்படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்திற்கு மொத ராத்திரி படக்குழுவை அழைத்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பூஜா ஹெக்டேவின் கைவசம் உள்ள புதிய படங்கள்.. அட என்னென்ன தெரியுமா?

மொத ராத்திரி படக்குழுவை சிவகார்த்திகேயன் சந்தித்தது குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

நடிகர் சிவகார்த்திகேயன் சிறு சிறு இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியாகி வெற்றியை பெரும் படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் மொத ராத்திரி படக்குழுவையும் நேரில் அழைத்து வாழ்த்தியிருக்கிறார். சிவகார்த்திகேயனை சந்திப்பதற்கு இயக்குநர் ராஜா கருப்பசாமி, நடிகர் ரிஷிகாந்த், அனிஷிமா அனில்குமார் மற்றும் படக்குழு உறுப்பினர்களும் சென்றுள்ளனர். இது தொடர்பான பதிவு இணையத்தில் வெளியாகிவரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஊரே துணை இருக்கு எனக்கிங்கு வேறு உறவெதுக்கு? 20 ஆண்டுகளைக் கடந்து நடிகர் சிம்புவின் வல்லவன் படம்!

சிவகார்த்திகேயனை சந்தித்தது குறித்து இயக்குநர் ராஜா கருப்பசாமி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Raja Karuppasamy (@raja_karuppasamy)

இந்த பதிவில் இயக்குநர் ராஜா கருப்பசாமி, “உங்களை மாதிரி ஆகவேண்டும் என்றுதான் முதல் முதலில் சென்னைக்கு வந்தேன் சிவகார்த்திகேயன் அண்ணா. பெரிய கனவுகளைக் காணவும், சினிமாவைத் தொடரவும் எனக்கு உத்வேகம் அளித்தவர்களில் நீங்களும் ஒருவர். இன்று, என் சொந்தப் படத்தை உருவாக்கி, உங்களிடமிருந்து இந்தப் பாராட்டைப் பெறுவது உண்மையிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது” என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us