AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பத்தா படத்திலிருந்து வெளியானது ஊரோட ஒத்த டான் பாடல் வீடியோ

Ooroda Oththa Don Video Song | நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது பத்தா படம். இந்தப் படத்தில் இருந்து ஊரோட ஒத்த டான் என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

பத்தா படத்திலிருந்து வெளியானது ஊரோட ஒத்த டான் பாடல் வீடியோ
பத்தாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Oct 2026 13:45 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து சினிமாவில் யார் வந்து நடிக்கக் கேட்டாலும் நடித்து வந்தார். மேலும் அறிமுக இயக்குநர்கள் பலருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அவர்களின் படங்களில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. அவ்வாறான முடிவு விஜய் சேதுபதியின் சினிமா கெரியரை பின்னுக்கு தள்ளியது. அதனைத் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தம் ஆவதில் கவனமாக முடிவெடுத்து வந்தார் விஜய் சேதுபதி. தொடர்ந்து தற்போது தனது படங்களின் மீது அதிக கவனமும் கதாப்பாத்திரங்களின் மீது தெளிவாகவும் முடிவெடுத்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் பத்தா.

காமெடி ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த பத்தா படத்தினை இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இவர்களின் கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப் படத்தின் மூலம் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பத்தா படத்திலிருந்து வெளியானது ஊரோட ஒத்த டான் பாடல் வீடியோ:

தொடர்ந்து படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் பத்தா படத்தில் இருந்து இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில் உருவான ஊரோட ஒத்த டான் என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… பிக் பாஸில் டாஸ்குக்காக அன்சரை குறிவைக்கும் பெண் போட்டியாளர்கள்.. மோதலில் முடித்த பிளான்!

பத்தா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வட சென்னை 2 படம் எப்போது தொடங்கும்? இயக்குநர் வெற்றிமாறன் ஓபன் டாக்!

Follow Us