AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் மமிதா பைஜூ… அட இந்த படத்திலா?

Mamitha Baiju Telugu Debut: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் இளம் நடிகையாக மிகவும் பிரபலமானவர் மமிதா பைஜூ. இவர் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நாயகியாக நடித்து அசத்திவருகிறார். இந்நிலையில் இவர் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறாராம். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் மமிதா பைஜூ… அட இந்த படத்திலா?
மமிதா பைஜுImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 11 Oct 2026 21:45 PM IST

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இதில் சூர்யா (Suriya) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான நிலையில், மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, மமிதா தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார்.

அந்த விதத்தில் தற்போது இவர் தெலுங்கு சினிமாவிலும் (Telugu Cinema) நாயகியாக அறிமுகமாகவுள்ளாராம். அது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. அந்த படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் யார் என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் அனிருத்திற்கு ஒரு பெரிய நெருக்கடி இருந்தது – நடிகர் ரஜினிகாந்த்

தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமாகும் மமிதா பைஜூ:

நடிகை மமிதா பைஜூ இளம் நடிகையாக இளம் ரசிகர்களை கவர்ந்துவருகிறார். இவர் தொடர்ந்து பேக் டு பேக் ஹிட் படங்களை கொடுத்துவரும் நிலையில், தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் கைகூடியுள்ளது. இவர் இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகும் ஜெய் ஹனுமான் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளராம்.

இதையும் படிங்க: அனைவரையும் ஏற்றுக்கொண்டு சமமாக நடத்த வேண்டும் என்பதை அழகாக நினைவூட்டும் படம் டோரதி – சௌந்தர்யா ரஜினிகாந்த்

இப்படத்தில் அவர் லீட் நாயாகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது, ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் மமிதா பைஜூ நடிக்கும் புதிய படம் குறித்து வைரலாகும் பதிவு:

நடிகை மமிதா பைஜூ தற்போது தமிழில் புதிய படத்தில் நடித்துவருகிறார். பிரதீப் ரங்கநாதனின் தயாரிப்பிலும், எழுத்திலும் உருவாகியுள்ள புது படத்தில் லீட் நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இந்த படமானது சிறப்பான ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது. இப்படத்திற்கு பின் மலையாளத்தில் “ஹலோ டியர்” என்ற படத்தில் சங்கீத் பிரதாப்பிற்கு ஜோடியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகே தெலுங்கில் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது

Follow Us