AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இன்று மாலை வெளியாகிறது ஓம் படத்திலிருந்து வீழா வீரா பாடல் – உற்சாகத்தில் ரசிகர்கள்

Veezha Veera Second single from OM movie | நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிளான வீழா வீரா பாடல் இன்று மாலை வெளியகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை வெளியாகிறது ஓம் படத்திலிருந்து வீழா வீரா பாடல் – உற்சாகத்தில் ரசிகர்கள்
ஓம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Oct 2026 07:00 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் தமிழ் சினிமாவிலே நடிகர் தனுஷின் நடிப்பில் படங்கள் வரிசைக்கட்டி வருகின்றது. அதன்படி முன்னதாக நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் கர என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டில் இரண்டாவதாக நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம் தி சாப்டர் ஒன்.

இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ளார். நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக இவர்களின் கூட்டணி முதன் முறையாக இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

இன்று மாலை வெளியாகிறது ஓம் படத்திலிருந்து வீழா வீரா பாடல்:

இந்தப் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் இருந்து அலாகா லூவா என்ற முதல் சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து வீழா வீரா என்ற இரண்டாவது சிங்கிள் வீடியோ இன்று மாலை வெளியாக உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… நீங்கு புடுங்குனது எல்லாமே தேவையில்லாத ஆணிதான் – பிக்பாஸில் எதிரணியை கலாய்த்த விஜய் சேதுபதி… வைரலாகும் வீடியோ

ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணையும் நடிகை நயன்தாரா? வைரலாகும் தகவல்

Follow Us