மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை – தமிழக அரசு அறிவிப்பு
Government Honours Music Composer Deva : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான தேவா அக்டோபர் 17, 2026 இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என தமிழின் முன்னணி கலைஞர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான தேவா அக்டோபர் 17, 2026 இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. ரஜினிகாந்த் (Rajinikanth), கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என தமிழின் முன்னணி கலைஞர்களின் படங்களுக்கு இசையமைத்த தேவா, திரையில் கானா பாடல்கள் மூலம் தனி கவனம் பெற்றார். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த்தின் டைட்டில் கார்டுக்கு நீண்ட காலமாக தேவாவின் இசை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை
இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இசையுலகில் அவர் ஆற்றிய சேவைக்காக அரசு மரியாதை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.




தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. கானா பாடல்கள் மட்டுமல்லாமல் ஏகப்பட்ட இனிமையான மெலோடி பாடல்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். இதன் காரணமாகவே அவர் தேனிசை தென்றல் தேவா என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார். பாரதிராஜா, பாலசந்தர், கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், சுரேஷ் கிருஷ்ணா என தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இதையும் படிக்க : இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகினர்!
இந்த நிலையில் அக்டோபர் 17, 2026 இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 76. இந்த நிலையில் அவரது உடல் வேலூரில் உள்ள அவரது சொந்த ஊரானா மாங்காடு என்ற இடத்தில்இறுதிச் சடங்கு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்யின் தேவா, ரசிகன், பகவதி, மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். அவரது இசையில் முதல்வர் விஜய் பல பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
முதல்வர் விஜய் இரங்கல்
தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 17, 2026
இது தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் தனது இரங்கல் பதிவில், தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
இதையும் படிக்க : தனுஷ்- சிவகார்த்திகேயன் அரசியல் பக்கமே வந்துராதீங்க.. மீறி வந்தால் செஞ்சிருவோம்.. தவெக பெண் விசிறி விடுத்த வார்னிங்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற தேவாவின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
இசையமைப்பாளர் தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.