தனுஷ்- சிவகார்த்திகேயன் அரசியல் பக்கமே வந்துராதீங்க.. மீறி வந்தால் செஞ்சிருவோம்.. தவெக பெண் விசிறி விடுத்த வார்னிங்!
Actors Dhanush And Sivakarthikeyan Political Journey : நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் அரசியலுக்கு வர வேண்டாம். அதையும் மீறி அரசியலுக்கு வந்தால் செஞ்சிருவோம் என்று கோவையில் முதல்வர் விஜய் ரோடு ஷோவில் தவெக ஆதரவு பெண் ஒருவர் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரத்தில் ரூ. 300 கோடியில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய் இன்று வெள்ளிக்கிழமை கோவை வருகை தந்திருந்தார். அப்போது, முதல்வர் ஜோசப் விஜய் கோவை விமான நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் வரை சுமார் 11.4 கிலோ மீட்டர் தொலைவில் ரோடு ஷோ மேற்கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் ஏராளமாக கூடியிருந்தனர். இதில், குறிப்பாக இளம் பெண்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். இதேபோல, முதல்வர் விஜய் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்துவிட்டு மீண்டும் திரும்பி சென்றபோதும் கொட்டும் மழையில் அவரை காண ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் காத்துக் கொண்டிருந்தனர்.
தயவு செய்து யாரும் அரசியல் பக்கம் வந்து விடாதீர்கள்
அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் பேசுகையில், முதல்வர் ஜோசப் விஜய் முதல் முறையாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அவரை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர்களான தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் அரசியலுக்கு வரப்போவதாக நினைக்கின்றனர். யாராலும் முதல்வர் விஜய் போல் மீண்டும் வந்து ஆட்சியைப் பிடிக்க முடியாது. எனவே, தயவு செய்து அரசியல் பக்கம் யாரும் வந்து விடாதீர்கள்.
மேலும் படிக்க: தயாராக இருந்த ஹெலிகாப்டர்.. கேரள செல்லவிருந்த முதல்வர் விஜய்.. பயணம் திடீர் ரத்து… பின்னணி என்ன!




மீறி அரசியலுக்கு வந்தால் செஞ்சிருவோம்
யாரோ உங்களின் மனதில் நீங்களும் முதல் அமைச்சர் ஆகலாம் என்று வதந்தியே பரப்பி உள்ளனர். தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்களுக்கு யாரும் காசு கொடுக்கவில்லை. முதல்வர் விஜய் மீதான பாசத்துக்காக காலை 8 மணி முதலை வந்து நின்று கொண்டிருக்கிறோம். இந்த கூட்டத்தில் உள்ள யாரும் உங்களுக்கு ஓட்டு கூட போட மாட்டார்கள். இதையும் மீறி நீங்கள் அரசியலுக்கு வந்தால் நாங்கள் உங்களை செஞ்சிருவோம் என்று தெரிவித்தார். நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சு எழுந்து வருகிறது.
அரசியலுக்கு எண்ட்ரி போடும் தனுஷ்- சிவகார்த்திகேயன்?
இவர்கள் தங்களது ரசிகர் மன்றத்தை இயக்கமாக மாற்றுவதும், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்வதும், ரசிகர் மன்றம் மற்றும் இயக்கத்துக்கு புதிதாக கொடிகளை தயார் செய்வதும், ரசிகர் மன்றத்தை வலுப்படுத்துவதும் என பல்வேறு அரசியலுக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இவர்கள் விரைவில் அரசியலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் அவர்களை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர். இது விவாதமாக மாறி உள்ளது.
மேலும் படிக்க: ரூ.100 கோடி போதைப்பொருள் கடத்தலில் கைது.. தவெக நற்பெயருக்கு களங்கம்.. நாகை ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நீக்கம்!