AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.100 கோடி போதைப்பொருள் கடத்தலில் கைது.. தவெக நற்பெயருக்கு களங்கம்.. நாகை ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நீக்கம்!

TVK Union Executive Committee Member Expelled : ரூ. 100 கோடி மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக நாகை மாவட்டத்தில் கீழையூர் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்.

ரூ.100 கோடி போதைப்பொருள் கடத்தலில் கைது.. தவெக நற்பெயருக்கு களங்கம்.. நாகை ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நீக்கம்!
தவெகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 16 Oct 2026 19:38 PM IST

இலங்கை நாட்டில் இருந்து சர்வதேச அளவில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் கடத்தப்பட்டு வருகிறது. இதில், நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பூபாலன் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு புகார் சென்றது. அந்த புகாரின் அடிப்படையில், தவெக ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பூபாலன் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சுமார் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட அதிரடி சோதனையானது சுமார் 8 மணி நேரம் நீடித்தது. இதே போல, இந்த புகாரில் தொடர்புடைய தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி பூபாலனின் நண்பரான பிரதாபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகன் என்பவரது வீட்டிலும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டிருந்தனர்.

பல கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பறிமுதல்

சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோவுக்கு அதிகமாக சர்வதேச போதைப் பொருளான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பூபாலனை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: அனுமதிக்கான தடை தகர்ந்தது.. தமிழகத்தில் 128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

ரூ. 100 கோடி போதைப்பொருள் கடத்தலில் தவெக நிர்வாகி கைது

இந்த நிலையில், 100 கிலோவுக்கும் அதிகமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சர்வதேச போதை பொருள் மெத்தப்பெட்டமைன் கடத்தல் வழக்கில் தமிழக வெற்றி கழகத்தின் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கைதான சம்பவம் தமிழக வெற்றிக் கழகத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், கைதான பூபாலனை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கி தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது.

தவெக ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கம்

இது தொடர்பாக, நாகப்பட்டினம் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் சுகுமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழக கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் தவெக ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பூபாலன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அட இவர தெரியலை.. இவருதான் எஸ்.ஐ. தாக்கிய இளைஞர்.. மீண்டும் பெண் காவலரை தாக்கிய சம்பவத்தில் அதிரடி கைது!

Follow Us