AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பொது மக்களுக்கு குட் நியூஸ்.. தீபாவளிக்கு காத்திருக்கும் சிறப்பு பரிசு.. விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு?

TN Govt Plans To Provide Grocery Kits : தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவு, இது தொடர்பான ஆலோசனையில் முதல்வர் ஜோசப் விஜய் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது மக்களுக்கு குட் நியூஸ்.. தீபாவளிக்கு காத்திருக்கும் சிறப்பு பரிசு.. விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு?
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 16 Oct 2026 17:25 PM IST

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பச்சரிசி, கரும்பு துண்டு, வெல்லம் உள்ளிட்டவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அத்துடன், பொங்கல் பரிசு ரொக்கமும் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுமா என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில், அண்டை மாநிலமான புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதே போல, தமிழகத்திலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் தொகுப்பு (Diwali Special Grocery Items Collection) வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிதித்துறை அதிகாரிகளிடம் முதல்வர் ஆலோசனை

இது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் இலவச மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்குவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்று நிதித்துறை அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை என தொடர்ந்து பண்டிகை காலமாக இருக்கும் நிலையில் அரிசி, மளிகை பொருட்கள், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க: அன்னாசி பழத்தை உருட்டிவிட்ட முதல்வர் விஜய்.. பின்னால் இருக்கும் முக்கிய காரணம்.. என்ன அது!

தீபாவளிக்கு இலவச மளிகை தொகுப்பு வழங்க திட்டம்

இதனை, எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சுமத்தி வருகின்றது. இந்த விவகாரம் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தகுதி உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது, அரசு சார்பில் இலவச மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைவார்கள் என முதல்வர் விஜய்யிடம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆலோசனை தெரிவித்துள்ளாராம்.

விரைவில் வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதன் அடிப்படையிலும், தமிழகத்தை விட அளவில் சிறிய மாநிலமான புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சுமார் 3 லட்சம் தகுதி உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் தொகுப்பு ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் குடிமை பொருள் வழங்கல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் புதிதாக தவெக ஆட்சியில் இலவச மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கலாம் என்று அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தலைமைச் செயலாக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Follow Us