AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தயாராக இருந்த ஹெலிகாப்டர்.. கேரள செல்லவிருந்த முதல்வர் விஜய்.. பயணம் திடீர் ரத்து… பின்னணி என்ன!

Chief Minister Vijay Kerala Visit : தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கோயம்புத்தூரில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக கேரளத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்ற காரணத்தை பார்க்கலாம்.

தயாராக இருந்த ஹெலிகாப்டர்.. கேரள செல்லவிருந்த முதல்வர் விஜய்.. பயணம் திடீர் ரத்து… பின்னணி என்ன!
முதல்வர் விஜய் கேரள பயணம் ரத்து.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 16 Oct 2026 15:07 PM IST

கோவையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருந்த பெரியார் அறிவுலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்  (Chief Minister Vijay Kerala Visit) இன்று வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 16- ஆம் தேதி) தனி விமானம் மூலம் கோவை சென்றிருந்தார். அங்கு, நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஜோசப் விஜய் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, மதிய உணவு அருந்திய அவர் கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக கேரள மாநிலம், திருச்சூரூக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால், கோயம்புத்தூரில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக முதல்வர் விஜய்யின் கேரள பயணம் தாமதமாகி இருந்தது.

முதல்வர் விஜய்யின் கேரள பயணம் திடீர் ரத்து

இந்த நிலையில், பலத்த மழை மற்றும் காலநிலை காரணமாக முதல்வர் விஜய்யின் கேரள பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பலத்த மழையின் காரணமாக ஹெலிகாப்டர் சேவை பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, தற்போது அதிக மழை பெய்து வருவதன் காரணமாக, ஹெலிகாப்டர் சேவை பாதிகப்படும் நிலை இருப்பதன் காரணமாக முதல்வரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை

இதனிடையே, கோயம்புத்தூரில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்லும் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளாக இருப்பதன் காரணமாக, அங்கும் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, கோயம்புத்தூர் மாநகர பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்த வண்ணமாக உள்ளது.

தனி விமானம் மூலம் சென்னை திரும்பும் முதல்வர்

முன்னதாக, கேரள மாநிலம், திருச்சூரில் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் விஜய் பங்கேற்க இருப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காகவே, கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சூர் மாவட்டத்திற்கு முதல்வர் விஜய் செல்லவிருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், முதல்வர் விஜய் தனி விமானம் மூலமாக கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு திரும்ப உள்ளார்.

கொட்டும் மழையில் குடை பிடித்தபடி விஜய் சாலை வலம்

அதன்படி, முதல்வர் ஜோசப் விஜய் தனது வாகனத்தில் கோயம்புத்தூர் விமான நிலையம் நோக்கி சென்றார். அப்போது, வழி நெடுகிலும் கூடி இருந்த பொதுமக்களை தனது வாகனத்தின் மேற்பகுதியில் நின்றவாறு கொட்டும் மழையில் குடை பிடித்துக் கொண்டு கை காண்பித்தவாறு சாலை வலமாக சென்றார்.

மேலும் படிக்க: ஆராய்ச்சி ஒப்புதலுக்கு ரூ. 1 லட்சம் லஞ்சம்… சாரா தக்கர் கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட்.. நெல்லையில் பரபரப்பு!

Follow Us