AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சி.வி சண்முகத்துக்கு பேரிடி.. ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்… எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு!

CV Shanmugam supporters expulsion : அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆதரவாளர்கள் 100- க்கும் மேற்பட்டோரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பான முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சி.வி சண்முகத்துக்கு பேரிடி.. ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்… எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு!
எடப்பாடி பழனிசாமி- சி.வி.சண்முகம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 15 Oct 2026 15:38 PM IST

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் 100- க்கும் மேற்பட்டோரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது அதிமுகவில் மீண்டும் ஒரு கலகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில், யார் யார் நீக்கம் செய்யப்பட்டனர் என்ற விவரத்தை விரிவாக பார்க்கலாம்.

சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்

இதில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சொந்த மாவட்டமான விழுப்புரம் அதிமுகவில் பொறுப்பு வகித்த ஒன்றிய, பேரூர், நகர கிளை நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஒன்றியங்களில் பொறுப்பில் இருந்து வந்த சுமார் 100- க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில்,

மேலும் படிக்க: அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி..

  • ஒன்றிய கிளை கழக செயலாளர்கள்.
  • இணை செயலாளர்கள்.
  • துணை செயலாளர்கள்.
  • பொருளாளர்கள் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து

  • அதிமுக கிளை கழக நிர்வாகிகள்.
  • வழக்கறிஞர் பிரிவு மற்றும் இளைஞர் அணி.
  • மகளிர் அணி மற்றும் மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு சார்பு அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் இந்த நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளனர்.

விழுப்புரம் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அதிமுக முகமாக பார்க்கப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்எல்ஏவின் தீவிர ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது அதிமுக வட்டாரத்திலும், விழுப்புரம் மாவட்டத்திலும் பெரும் பரபரப்பை அதிகரித்துள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராகவும், பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எனவும், அதற்கு ஆதரவான எம்எல்ஏக்களிடம் கடிதம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

சி.வி. சண்முகம் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்

இது தொடர்பாக, எஸ். பி. வேலுமணி தலைமையில் கூட்டம் நடைபெற்று வந்தது. அத்துடன், நேற்று சி.வி. சண்முகம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அவர்கள் மீது அதிமுக தலைமை இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக தலைமை கலந்து ஆலோசிக்க வேண்டும் – சி.வி சண்முகம்

Follow Us