AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

234 தொகுதிகளிலும் இறங்கும் வீ த லீடர்ஸ்.. அதிரடியாக அறிவித்த அண்ணாமலை.. மாஸ் பிளானின் பின்னணி என்ன!

We The Leaders Contest Local Body Election : தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அந்த அமைப்பின் நிறுவனர் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

234 தொகுதிகளிலும் இறங்கும் வீ த லீடர்ஸ்.. அதிரடியாக அறிவித்த அண்ணாமலை.. மாஸ் பிளானின் பின்னணி என்ன!
வி தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 13 Oct 2026 20:50 PM IST

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் 234 தொகுதிகளிலும் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும் என்று அந்த அமைப்பின் நிறுவனர் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சோழ பாண்டியில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில், வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் கையில் வைக்கப்பட்ட அடையாளமே கூட காயவில்லை. அதற்குள் கட்சி வேஷ்டி மாறிவிட்டது. கட்சி மாறிவிட்டது. ஆட்சியும் மாறிவிட்டது. வாயும் மாறிவிட்டது. இந்த அரசியலை உடைக்க வேண்டும் என்பதற்காக தான் வீ த லீடர்ஸ் அமைப்பு களத்தில் உள்ளது. இது போன்ற மோசமான அரசியலை நாமும், நம்முடைய நண்பர்களும் பண்ணக்கூடாது.

உள்ளூரில் தலைவர்களை உருவாக்கி பணி செய்ய வேண்டும்

ஏனென்றால், இதுபோன்ற அரசியலை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். இதில், மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடையாது என்பதையும் உணர்ந்து விட்டோம். இடைத்தேர்தலின் போது வீதி வீதியாக வந்து பிரச்சாரம் செய்யக்கூடிய தலைவர்கள், தினமும் நமது வீடுகளுக்கு வருவார்களா. கிராமங்கள் தோறும் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பார்களா என்றால் கிடையாது. இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உள்ளூரில் தலைவர்களை உருவாக்க வேண்டும். உள்ளூரில் தலைவர்களை உருவாக்கி எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவர்களை பணி செய்ய வைக்க வேண்டும்.

மேலும் படிக்க: தீபாவளிக்கு ரூ.700 மதிப்பிலான சிறப்பு மளிகை தொகுப்பு.. அரசின் ஷ்பெஷல் அறிவிப்பு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

வீ த லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறும் போது . . .

வீ த லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறும் போது நீங்கள் அனைவரும் சொல்வீர்கள். நமக்கு இது போன்ற ஒரு அரசியல் கட்சி வேண்டும் எதற்காக தான் காத்திருந்தோம் என்று கூறுவீர்கள். 234 சட்டமன்ற தொகுதிகளில் தலைவர்கள் வேண்டும். மேலும் பல தலைவர்கள் வேண்டும். தமிழகத்தில் மொத்தம் 12,525 பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் பஞ்சாயத்து தலைவர்கள் வரவேண்டும். அப்போதுதான் மாற்றம் என்பது நடக்கும். தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளனர். அதை உருவாக்க சிறிது நேரம் வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் வீ த லீடர்ஸ் போட்டியிடும்

வரும் உள்ளாட்சித் தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்டியிட உள்ளது. அடிப்படை மாற்றத்தை ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் கொண்டு வந்து, அதன் பிறகு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு உள்ளாட்சியில் இருந்து சட்டப்பேரவை வரை வீ த லீடர்ஸ் மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்ற ஒற்றைக் கருத்து உள்ளது. அறிக்கையின் மூலம் ஒருவர் சரியில்லை என்று சொல்வதை விட நாம் இறங்கி பணி செய்து காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: எதிரிகள் தொல்லை அகல.. ராகு கால தரிசனம்.. ஆந்திரா ஸ்ரீ கனக துர்கா கோவிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு!

Follow Us