AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எதிரிகள் தொல்லை அகல.. ராகு கால தரிசனம்.. ஆந்திரா ஸ்ரீ கனக துர்கா கோவிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு!

CM Vijay Prayers Sri Kanaka Durga Temple : ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கனக துர்கா கோவிலில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். அவருக்க கோயில் நிர்வாகம் தரப்பில் பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது.

எதிரிகள் தொல்லை அகல.. ராகு கால தரிசனம்.. ஆந்திரா ஸ்ரீ கனக துர்கா கோவிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு!
ஸ்ரீ கனக துர்கா கோவிலில் முதல்வர் விஜய் வழிபாடு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 13 Oct 2026 17:26 PM IST

தமிழக முதல்வர் விஜய் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்காக ஒரு நாள் பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை ஆந்திர மாநிலம் சென்றுள்ளார். அங்கு, விஜயவாடாவில் அமைந்துள்ள ஸ்ரீ கனக துர்கா கோவிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் உள்ளே சென்ற முதல்வர் விஜய் கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீ கனக துர்கா அம்மனை மனமுருக வேண்டி வழிபாடு மேற்கொண்டார். அப்போது, கோவில் அர்ச்சகர்கள் முதல்வர் விஜய்க்கு திலகம் இட்டு சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பெரிய அளவிலான சுவாமி படம் மற்றும் நினைவு பரிசு ஆகியவை வழங்கப்பட்டது.

எதிரிகள் தொல்லை அகல- செழிப்பு உண்டாக

இந்த கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ கனக துர்கா அம்மனை ராகு காலத்தில் வழிபாடு மேற்கொள்வது சிறப்பானதாகும். அத்துடன் எதிரிகள் தொல்லை அகலவும், செழிப்பு உண்டாகவும் இந்த அம்மனை பக்தர்கள் மனம் உருகி வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இந்த கோவிலில் கனகதுர்கா அம்மனை வழிபாடு மேற்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க : தீபாவளிக்கு ரூ.700 மதிப்பிலான சிறப்பு மளிகை தொகுப்பு.. அரசின் ஷ்பெஷல் அறிவிப்பு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 

ஸ்ரீ கனக துர்கா கோவிலின் சிறப்புகள் என்ன

ஸ்ரீ கனக துர்கா கோவில் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த அம்மனானது மகிஷாசுரனை வதம் செய்த தேவி இந்திர கீலாத்திரி மலையில் வீற்று பொன்மலை பொழிந்ததன் காரணமாக ஸ்ரீ கனக துர்க்கை என பெயர் பெற்றது. கோவிலில் அமைந்துள்ள இந்த அம்மன் 8 கைகளுடன் காட்சி தருகிறார். இந்த கோவிலின் கருவறை மேற்பகுதி தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேரில் சந்தித்திருந்தார்.

விஜயவாடா வருமாறு அழைப்ப விடுத்த எம்.பி.

அப்போது, விஜயவாடாவில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவையொட்டி உற்சவ திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். அதன் அடிப்படையிலும், தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்தும், இரு மாநில நீர் வள பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்காக முதல்வர் விஜய் ஆந்திர மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். இதற்காக கனக துர்கா அம்மன் கோயிலில் சிறப்ப தரிசனம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஆயுத பூஜை ஸ்பெஷல்.. பொரி, பூ, பழம் எல்லாம் ஒரே இடத்தில்.. கோயம்பேட்டில் சிறப்புச் சந்தை!

Follow Us