AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அதிமுகவில் மீண்டும் வெடித்த உள்கட்சி பூசல்.. எடப்பாடிக்கு முற்றும் நெருக்கடி.. எஸ்.பி.வேலுமணி தலைமையில் 3-ஆவது நாளாக ஆலோசனை!

AIADMK S. P. Velumani Consultation : சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வி அடைந்து வரும் நிலையில், தலைமை மீதான அதிருப்தியில் இருந்து வரும் தரப்பினர் இன்று எஸ்.பி. வேலுமணி தலைமையில் 3- ஆவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டனர் .

அதிமுகவில் மீண்டும் வெடித்த உள்கட்சி பூசல்.. எடப்பாடிக்கு முற்றும் நெருக்கடி.. எஸ்.பி.வேலுமணி தலைமையில் 3-ஆவது நாளாக ஆலோசனை!
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 12 Oct 2026 15:33 PM IST

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வண்ணமாக அதிமுக 3- ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது. கடந்த 2022- ஆம் ஆண்டு எதிர்பாராத தோல்வியை சந்தித்த அதிமுகவில் மீண்டும் உள் கட்சி பூசல் வெடித்துள்ளது. அதாவது, சட்டமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிவற்றில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கும், 3- ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டதற்கும் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என முக்கிய நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். சிலர், அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், இடைத்தேர்தல் தோல்வியால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

எஸ்.பி. வேலுமணி தலைமையில் 3- ஆவது நாளாக ஆலோசனை

இதில், முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் வீட்டில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், ஆதரவாளர்கள் ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று திங்கள் கிழமை 3- ஆவது நாளாக இந்த ஆலோசனை நடைபெற்றது. அதில், அதிமுக பொதுக்குழுவை கூட்டலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. அத்துடன், எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளே அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு காரணம் என அதிருப்தி குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க: காவல் நிலையத்திலேயே பைக்குகள் திருட்டு – போலீஸ் உட்பட 3 பேர் கைது… சென்னையில் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி

இதனால், தமிழகத்தில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு அதிமுகவில் பெரிய அளவிலான தலைமை மாற்றம் அல்லது ஒருங்கிணைப்பு தேவை என்ற கோரிக்கை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பூசல் வெடித்துள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, எடப்பாடியின் பேச்சை மீறி தவெக அரசின் ஆதரவுக்கு வாக்களித்த 25 எம்எல்ஏக்களில் முக்கியமான நிர்வாகிகளின் பதவி பறிக்கப்பட்டு இருந்தது.

அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தி

இது அதிமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் எஸ்.பி. வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் ஓரணியாக திரண்டனர். இந்த அணியில் சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்தனர். பின்னர், பிரச்சனை சமூகமான நிலையில் எஸ் பி வேலுமணி உள்ளிட்டோருக்கு கட்சி பதவி வழங்கப்பட்டது. ஆனால், மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டங்களில் எஸ்பி வேலுமணி தரப்பினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: “தவெக கூட்டணியில் பாமக வந்தால்”.. விசிகவின் அதிரடி நிலைப்பாட்டை விளக்கிய அமைச்சர் வன்னி அரசு!!

Follow Us