ஈரோட்டில் பெரும் சோகம்.. சகோதரிக்கு வாட்ஸ் ஆப்பில் மெசெஜ் அனுப்பிவிட்டு… குழந்தையுடன் தந்தை விபரீத முடிவு!
Erode Crime : ஈரோட்டில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் தனது 1.5 வயது குழந்தையுடன் சரக்கு ரயில் மு ன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
ஈரோடு மாவட்டம், மகுடஞ்சாவடி- வீரபாண்டி ரயில் நிலையத்துக்கு இடையே ரயிலில் அடிபட்டு ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆண் உயிர் இழந்து கிடப்பதாக ஈரோடு ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று இருவது சங்கடத்தை மீட்டு பிரதமர் சோதனை மேற்கொள்வதற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், உயிரிழந்த கிடந்த நபர்கள் யார். அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா. அல்லது கொலை செய்யப்பட்டு சடலம் இங்கு வீசப்பட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரிய வந்தது.
இருவர் குறித்த அடையாளம் தெரிந்தது
அதில், சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் ( 27 வயது). கூலித்தொழில் செய்து வந்தார். இவரது மனைவி வித்தியா. தம்பதிக்கு கடந்த 2022- ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் சாய் ரித்திக் என்ற ஆண் குழந்தை இருந்தது. மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த விஜயகுமார் மது அருந்திவிட்டு தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு ஈடுபடுவாராம். இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வித்யா தனது மகன் சாய் ரித்விக்குடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
மேலும் படிக்க: கடலூரில் பயங்கரம்.. வழக்கறிஞர் நலச்சங்க தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!




கணவன்- மனைவி தகராறில் வந்த வினை
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வித்யா வசித்து வரும் வீட்டுக்கு சென்ற விஜயகுமார், அவரிடம் சண்டை போட்டுவிட்டு தனது மகன் சாய் ரித்திகா தன்னுடன் அழைத்து வந்துள்ளார். அந்த குழந்தையை ஆட்டையாம்பட்டியில் உள்ள எனது தந்தை மற்றும் சகோதரிகளின் பொறுப்பில் விஜயகுமார் விட்டு சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில் தனது சகோதரி ரூபா ஸ்ரீயிடம் குழந்தையை பெற்றுக் கொண்டு விஜயகுமார் வெளியே சென்றுள்ளார்.
மெசேஜ் அனுப்பிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை
பின்னர், ரூபா ஸ்ரீயின் வாட்ஸ் ஆப்பில், தனது மனைவி வித்தியாவுடன் சேர்ந்து வாழ முடியாத காரணத்தால் நானும், உங்களையும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மெசேஜ் அனுப்பி விட்டு ஈரோடு எல்லைக்குள்பட்ட மகுடஞ்சாவடி- வீரபாண்டி பகுதியில் நள்ளிரவு ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி செல்ல சரக்கு ரயிலில் விழுந்து தற்கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: புதுக்கோட்டையில் பகீர்.. ஊதிய பாக்கியால் வெடித்த மோதல்.. பர்னிச்சர் கடை உரிமையாளர் கொலை.. இருவர் கைது!