AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புதுக்கோட்டையில் பகீர்.. ஊதிய பாக்கியால் வெடித்த மோதல்.. பர்னிச்சர் கடை உரிமையாளர் கொலை.. இருவர் கைது!

Pudukkottai Murder : புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பள பாக்கி வைத்த பர்னிச்சர் கடை உரிமையாளர் கையில் இருந் த இரும்பு காப்பால் கொடூரமாக தாக்கி கொலை செய்த இரு தொழிலாளர்களை திருமயம் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் .

புதுக்கோட்டையில் பகீர்.. ஊதிய பாக்கியால் வெடித்த மோதல்.. பர்னிச்சர் கடை உரிமையாளர் கொலை.. இருவர் கைது!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Oct 2026 17:57 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மெய்யப்பட்டியை சேர்ந்தவர் பிரபு ( 43 வயது). இவர், அந்த பகுதியில் உள்ள கடை வீதியில் பர்னிச்சர் வியாபாரம் செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் கரூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்த அய்யாதுரை ( 28 வயது) மற்றும் குளித்தலையை சேர்ந்த கார்த்திக் ( 30 வயது) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் சில மாதங்களாக பிரபு சம்பளம் கொடுக்காமல் பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பளத் தொகையை வழங்குமாறு கார்த்திக், அய்யாதுரை கேட்டு வந்துள்ளனர். இதில், தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், சந்தைப்பேட்டையில் உள்ள ஃபர்னிச்சர் குடோனில் சம்பவத்தன்று இரவு பிரபு நின்று கொண்டிருந்தார்.

இரும்பு காப்பால் தாக்கி கடை உரிமையாளர் கொலை

அப்போது, அங்கு சென்ற அய்யாதுரை மற்றும் கார்த்திக் ஆகியோர் தங்களது சம்பள பாக்கி குறித்து கேட்டுள்ளனர். இதில், அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது, அய்யாதுரை மற்றும் கார்த்திக் ஆகியோர் தங்களது கைகளில் அணிந்து இருந்த இரும்பு காப்புகளால் பர்னிச்சர் கடை உரிமையாளர் பிரபுவை பலமாக தாக்கி உள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் பலத்த ரத்த காயத்துடன் பிரபு அங்கேயே சுருண்டு விழுந்தார். இதை பார்த்ததும் அய்யாதுரை, கார்த்திக் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் படிக்க: பெண் தர மறுத்ததால் ஆத்திரம்.. சிறுமி வீட்டில் நள்ளிரவில் குண்டு வீச்சு.. நெல்லையில் பரபரப்பு சம்பவம்!

திருமயம் போலீசார் தீவிர விசாரணை

உடனே, அருகில் இருந்தவர்கள் பிரபுவை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் பிரபு குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையாளிகளை கைது செய்த போலீசார்

அத்துடன், பிரபுவின் குடும்பத்தினரிடமும், அவரது கடையில் வேலை பார்த்து வரும் பிற தொழிலாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அய்யாதுரை மற்றும் கார்த்திக் ஆகியோர் தலைமறைவாகி இருந்த நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை தேடும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். புதுக்கோட்டையில் சம்பள பாக்கி வைத்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக பர்னிச்சர் கடையின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: போலீஸுக்கு தண்ணி காட்டிய போக்சோ கைதி.. 3 ஆயுதப்படை காவலர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை.. கன்னியாகுமரியில் பரபரப்பு!

Follow Us