AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண் தர மறுத்ததால் ஆத்திரம்.. சிறுமி வீட்டில் நள்ளிரவில் குண்டு வீச்சு.. நெல்லையில் பரபரப்பு சம்பவம்!

Nellai Crime : திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணத்துக்கு பெண் தர மறுத்தவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நபரை சேரன்மகாதேவி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் தர மறுத்ததால் ஆத்திரம்..  சிறுமி வீட்டில் நள்ளிரவில் குண்டு வீச்சு.. நெல்லையில் பரபரப்பு சம்பவம்!
கைதான இளைஞர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Oct 2026 15:24 PM IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள பொழிக்கரை சுண்ணாம்புக்கல் தெருவை சேர்ந்தவர் முருகன். இவர், விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் சிவா ( 21 வயது). அந்த பகுதியில் ரேடியோ செட் வைத்து நடத்தி வருபவர் கமலநாதன். இவருக்கு ஒரு மகள் இருந்து வருகிறார். இவரிடம், முருகன் மகன் சிவா தன்னை காதலிக்குமாறு தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு தற்போது 18 வயதே ஆகும் நிலையில், அந்த சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு சிவா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு, கமலநாதன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை கேட்காத சிவா அவர்களது வீட்டுக்கு நேரில் சென்று தனக்கு அந்த சிறுமியை திருமணம் செய்து வைக்கும்படி தெரிவித்துள்ளார்.

வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்

இதற்கு கமலநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையிலும், அதனை கேட்காத சிவா அடிக்கடி பெண் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, விவசாயி முருகன் குடும்பத்திற்கும், கமலநாதன் குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு கமலநாதன், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் உணவு அருந்திவிட்டு தூங்க சென்றனர். அப்போது, நள்ளிரவில் அவர்களது வீட்டில் திடீரென சத்தம் கேட்டது.

மேலும் படிக்க: காதல் மனைவி அளித்த பரபரப்பு புகார்.. பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் திடீர் கைது.. காவல்துறையில் பரபரப்பு!

சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார்

இதை கேட்ட கமலநாதன் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மறுநாள் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று சாதாரணமாக விட்டு விட்டார். பின்னர், மறுநாள் காலையில் எழுந்து சென்று பார்த்தபோது வீட்டின் வளாகத்தில் கண்ணாடி பாட்டில் துகள்கள் சிதறி கிடந்தன. மேலும், அந்த பகுதியில் பெட்ரோல் பரவி தீப்பிடித்து எரிந்த தடயங்கள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கமலநாதன் இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இளைஞர் கைது செய்து சிறையில் அடைப்பு

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்ததில், சிவாவின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கமலநாதன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதை ஒத்துக் கொண்டார். தொடர்ந்து, சிவாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: திண்டுக்கல் பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு.. இந்த கொடூஞ் செயலை செய்தது இவர்களா? போலீஸ் விசாரணையில் ஷாக் தகவல்!

Follow Us