AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திண்டுக்கல் பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு.. இந்த கொடூஞ் செயலை செய்தது இவர்களா? போலீஸ் விசாரணையில் ஷாக் தகவல்!

Dindigul School Water Tank Mixing Human Excreta : திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவத்தில் 11 வயது சிறுவன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது .

திண்டுக்கல் பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு.. இந்த கொடூஞ் செயலை செய்தது இவர்களா? போலீஸ் விசாரணையில் ஷாக் தகவல்!
மானூர் அரசு பள்ளி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 09 Oct 2026 15:35 PM IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள மானூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள சிண்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் குழாய் உடைக்கப்பட்டு, தொட்டிக்குள் மனித மலம் கழித்து அசுத்தப்படுத்தப்பட்டிருந்தது. இதை அறிந்த பள்ளி நிர்வாகம் 2 நாட்களாக மூடி மறைத்த நிலையில், பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டத்தின் போது இந்த விவகாரம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அந்த பள்ளிக்கு நேரில் சென்று குடிநீர் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் இதில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

மலம் கழித்தது 11 வயது சிறுவன் என அடையாளம்

இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், மானூர் அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது அந்த பகுதியை சேர்ந்த 11 வயதான இரு சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், விளையாட்டுத்தனமாக இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில், சிறுவர்களுக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை எனவும், விளையாட்டுத்தனமாக நிகழ்ந்த செயல் எனவும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க: சட்டம்- ஒழுங்கின் முக்கிய கண்காணிப்பாளர்.. தமிழக உள்துறை செயலாளர் அதிரடி மாற்றம்..!

அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விளக்கம்

இதனால், தமிழகத்தையே பெரும் பரபரப்பாகிய இந்த சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், குடிநீர் தொட்டி அசுத்தப்படுத்தப்பட்டிந்ததை அறிந்த உடனே மாணவர்கள் யாரும் அந்த தண்ணீரை அருந்தி விடக்கூடாது என்பதற்காக உடனடியாக ப்ளீச்சிங் பவுடர் போட்டு கழுவி சுத்தம் செய்யப்பட்டது. அந்த குடிநீரை எந்த மாணவர்களும் குடிக்கவில்லை.

3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார்

இது தொடர்பாக கல்வி துறையின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக விளக்கம் அளித்து இருந்தார். இதைத் தொடர்ந்து, கீரனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பொது குடிநீர் ஆதாரத்தை அசுத்தம் செய்தல், நோய் தொற்றை பரப்பும் வகையில் ஆபத்தான முறையில் செயல்படுதல், அசுத்தமான பொருட்களை கலந்து உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இரு தொகுதி இடைத்தேர்தல் தோல்வி முகம்.. ஆரவாரமின்றி காத்து வாங்கும் திமுக- அதிமுக- கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள்!

Follow Us